கண் கெட்ட பின்பா சூரிய நமஸ்காரம்
சுதந்திரம் இந்தியர்கள் எல்லோருக்கும்
கற்று கொடுத்தது தந்திரம் மட்டுமே!
பணம் காய்க்கும் மரமாக
அரசியல்;
பயம் உருவாக்கும் மாயையாக
கட்டப்பஞ்சாயத்து;
வலியவனுக்கே வாழ்க்கையும் வசதியும்
என்றால்
வாய்மை எங்கே வெல்லும்?
சாக்கடையாகும் சமூகத்தில்
சந்தர்ப்பவாதிகள் மத்தியில்
கண்ணியமா, வது, கட்டுப்பாடா,வது?
வெள்ளை மரியாதை இழந்தது,
அரசியலுக்கு சீருடையானதால்;
கறுப்பு மரியாதையை கேட்டுப்பெற்றது,
இன உணர்வு என்ற போலிப்பேச்சால்;
ஊழல் இப்போதெல்லாம்
அரசியலில் 'சிலபஸ்' ஆனது;
தேர்தலில் நிற்பதற்கே ஆணையம்
நிர்ணயிக்கும் செலவு பாருங்கள் -
2014-ல் 16 லட்சமாம்,
2016-க்கு 28 லட்சமாம்.
என்ன ஒரு சமூக லட்சணம்?
எங்கே போகும் சமதர்ம லட்சியம்?
எங்கேயாவது ஊழலில்லாத
அரசியல்வாதியை தேடிப்பாருங்கள் -
'ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன்
சென்ற' கதையாகி விடும்;
இந்தவாட்டி யார் சார் வருவாங்கன்னு
ஊரெல்லாம் கேட்டாச்சு;
மேல்ஜாதிஎல்லாம் அம்மான்றாய்ங்க;
மத்தவனெல்லாம் மாற்றம் வரும்ட்றாங்க!
ஜாதியை சமூக நீதியினால் ஒன்றும் செய்ய முடியாமல்
சாதியாலே சில கொலைகளை சினிமாவாக்கி விட்டார்கள்;
காதல் கதைகளில் கூட சாதியில்லாமல் கிளைமாக்ஸ் இல்லை,
ஜாதிக்கட்சிகள் கூட்டணி போட்டு
அரசியல் இன்னும் கொஞ்சம் அசிங்கமாச்சு,
பார்ப்பானா, தலித்தா என்கின்ற தர்க்கம் எல்லாம்
கைத்தட்டு வாங்கி கொள்ளும் மேடையாச்சு!
இதில, தேசப்பற்றும் நாட்டுபற்றும் -னு பேசறவங்க ஓஞ்சு போக
காமராஜர் ஆட்சி வேணும்னு சொல்றதெல்லாம் பேஷனாக
'காலம் கலிகாலம் ஆகி போச்சுடா,
கஷ்மாலம் இங்கே கஷ்டப்படுத்துடா-ன்னு
- புலம்ப விட்டுடாங்களே...!