வழிகாட்டும் உளி

சிற்பியை செதுக்குது சிற்றுளி – அது
செதுக்கிட விளைந்தது பொற்கிளி
பொற்கிளி ஓங்கிய சுத்தியல் – அதன்
பொன்னிறம் கண்டுதான் வியக்குது
கற்பனை அற்புத ஓவியம் – கலைக்
கவின்மிகு மேனியில் மிளிருது
கற்புள மாதரின் மெய்யுறை – தனை
கவசமாய் மேலும் நெய்யுது.

உனக்குள் இருக்கும் உன்னை
உயர்வாய் செதுக்கும் போது
தனக்குள் இருக்கும் தன்னலம்
தானே மறையும் என்பதை
மனக்கண் முன்பில் காட்டியே
மதிபோல் மேலும் ஜொலித்திடும்
வனப்பின் வாழ்க்கைத் தத்துவ
வழிதனை காட்டுது உளியினால்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Mar-16, 2:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vazhikaattum uli
பார்வை : 247

மேலே