கடந்து வந்த பாதை

செழிப்பான சிறுவயது
கண்ணுக்குள் ஆடுதடா..
செல்வத்தால் குளிச்சதிப்போ
நெஞ்சுக்குள் இருக்குதடா..

பசுமையான காட்சியெல்லாம்
கண்ணீர்முட்ட வைக்குதடா..
வயது ஏறஏற‌
உறவுகள் போனதுடா..

இருக்கும்வரை அள்ளிக்கிட்டு
என்னைத்தள்ளி விட்டதடா..
தனியாயெனை தவிக்கவிட்டு
வெகுதூரம் பறந்ததுடா..

பட்ட மரமாயிப்போ
என்வாழ்வு ஆனதுடா..
வெட்டப்பட்ட இதயமது
தேம்பிதேம்பி அழுகுதடா..

மனசுக்குள் பட்டவடு
ஆற மறக்குதடா..
கனமான உடலவிட்டு
உயிர்போக துடிக்குதடா..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Mar-16, 7:16 am)
பார்வை : 1074
மேலே