‪இளமை காலங்கள்‬

இளமை காலங்கள் வாழ்வின் வண்ணங்கள்
முதுமைக் காலத்தை அழகாக்கும் எண்ணங்கள்
இனிக்கும் நாட்களவை மணக்கும் பூக்களவை
தணிக்கும் தாகமதை போக்கும் சோகமதை

இன்பம் கூட்டுமவை துன்பம் ஓட்டுமவை
சந்தம் சேர்க்குமவை சுகந்தம் கொடுக்குமவை
இதயம் நிறைந்திருக்கும் உதயம் நிதமளிக்கும்
அன்பு மணித்துளிகள் அருமை பனித்துளிகள்

அமர்ந்து யோசித்தால் உள்ளம் குதுகலிக்கும்
நட்பை பார்த்திட்டால் உற்சாகம் தூளியாடும்
மறக்க இயலாத வாழ்வின் கல்வெட்டு
சிறந்த சிற்பமாக மனக்கோயில் குடியிருக்கும்

கண்ணின் ஓரத்தில் கண்ணீரை துளிர்த்திடுமே
திண்ணம் நமக்களித்து பன்னீரைத் தெளித்திடுமே
திரும்ப கிடைக்காத சொர்க்க நாட்களவை
அரும்பும் மனச்செடியில் மணக்கும் பூக்களவை

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Mar-16, 7:44 am)
பார்வை : 796

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே