மனசெல்லாம் 11

{ கதை சுருக்கம் : ராதிகா செல்லும் வழியில் மறித்து சித்தார்த் கையை பிடித்து இழுத்தான். ராதிகா இலையாவை உரக்க கூப்பிடுகிறாள் }
ராதிகா சித்தார்த்தின் கையிலிருந்து வெளிவர முயற்சிக்கிறாள். இலையாவிற்கு இவள் உரைத்தது கேட்கவில்லை அவள் தொலைவில் கைபேசியினை உபயோகித்து கொண்டிருக்கிறாள்.
சித்தார்த் ராதிகாவின் கையினை இறுக்கமாக பிடித்தபடி உன்னிடம் பேச வேண்டும் இங்கே வா என்று இழுக்க, ராதிகா என் கையை விடு உன்னிடம் பேச ஒன்றும் இல்லை என் கையை விடு என்று கூற, விடாது சித்தார்த் " காதலர் தினத்திற்கு நீ எனக்கு சம்மதம் சொல்லுவ னு காத்திருந்தேன் அனால் நீ சொலுற மாறி தெரியல நீ வா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் ".
ராதிகா உரக்க குரலில் இலையா என்றால்.இலையா அதிர்ந்து போய் திரும்பினால்.தொலைவில் இருந்த இலையா திரும்பினால் ஆனால் அந்த தெருவில் உள்ள ஒரு கதவும் திறக்கவில்லை இதுதான் நம் சமூகமோ, ராதிகா பலமாக கைகளை தள்ளிவிட உன்னை நான் பிறகு பார்த்து கொள்கிறேன் என்றபடி சென்றான்.
இவர்களோ திரும்பி வீடு சென்றனர்.அதன் பின் தெருவினையும் அவனின் வாசளினையும் பார்த்த பின்னே அவன் இல்லை என்று சரி பார்த்த பின்னே இவள் வீட்டினை விட்டு காலினை வெளியில் வைப்பாள்.வாரம் சென்றது அவனை எங்கும் காணாத ராதிகாவின் மனது மகிழ்ந்தது. சோகத்திலிருந்து வெளி வந்து முன் போல் மகிழ்ச்சியினால் துள்ளினால்.
ஆண்டு விழா பள்ளியில் நடக்க விருப்பதாகவும் அதற்க்கு 11ம் ஆண்டு படிக்கும் ராதிகாவின் பள்ளி மாணவர்களே சிறிய பிள்ளைகளையும்,தாங்களும் நடனம் ஆட வாய்ப்பு வந்தது.ராதிகாவோ பள்ளி தோழிகளுடன் சிறிய குழந்தைகளுக்கும்,தாங்களும் ஒரு நடனம் பயிற்சி தொடங்கினர்.
பாடத்தினை தள்ளும் நல வாய்ப்பு அல்லவோ இது ? வகுப்பினை கட் அடித்து நடனம் பயிற்சி செய்தனர், புதிய பாடலின் மெட்டுகளை மட்டும் எடுத்து அதற்கேற்ற படி நடனம் ஆடினர்.அதில் ஒரு 8அம் வகுப்பு படிக்கும் மாணவன் அக்கா என்று நன்கு பேசும் ஒரு தம்பி கிடைத்தான் ராதிகாவிற்கு. நடம் ஆடிய அனைவரும் மிகவும் ஒன்றுக்குள் ஒன்றானனர். அதில் 8அம் வகுப்பு படிக்கும் ஷமீர் என்னும் மாணவன் இன்னும் உடன் பிறந்த தம்பியினை போல் ஆணாணன்.
ராதிகா வீடு செல்ல அவனுடன் செல்ல தொடங்கினால்.பாதுகாப்பாய் இருந்ததை உணர்ந்து தினமும் இதனை தொடர்ந்தாள்.ஷமீர் கொம்பு சுற்றவும் தெரியும்.ஒருநாள் ராதிகா அவனுடன் பேசிய வண்ணம் சித்தார்த் பார்த்தான்,சிதர்த்தினை கண்டு ஷமிரிடம் உனக்கு சிலம்பம் தெரியும் தானே என்றால். அவனோ அவர்களை முறைத்த வண்ணம் தெரியும் அக்கா நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றான்.
இன்னும் ஆண்டு விழாவிற்கு 3 நாட்களே உள்ளது.ஆண்டுவிழாவின் போது அனைவரும் ஒரே போல் மேலாடை அணிய வேண்டும் என்று ஆலோசித்து வெள்ளை நிற தாழ்ந்த மேலாடையும் ஜீன்ஸ் உம் போட முடிவெடுத்தனர்.அதன் படி ஆடைகளையும் வாங்கி தாயார் நில்லையில் இருந்தனர்.மேடைகளில் ஆட ஒரு முறை ஆடிபார்ப்போம் என்று மேடைகள் கட்டிகொண்டிருக்கும் இடத்திற்கு சென்று ஆடியும் பார்த்தனர்.
நாளை ஆண்டு விழா மாலை 6 மணிக்கு தொடங்கும் அனைவரும் காலை வாருங்கள் ஆடைகளை கொண்டு செல்லுங்கள் ஒருமுறை மேடைகளையும் பார்த்து கொள்வோம் என்றனர்.அதன் போலவே காலை அனைவரும் பள்ளியில் ஒன்று கூடினர் சிறு பிள்ளைகளையும் வரவழைத்து ஒருமுறை ஆடி பார்த்தனர்.சிறு குழந்தைகளுக்கும் ராதிகாவை மிகவும் பிடிக்கும் அனைத்து குழந்தைகளும் அக்கா நம்ம இன்றைக்கு ஆட போறோமா நீங்களும் கூடவே இருப்பிங்கள என்றெல்லாம் கேட்க ராதிகாவும் சிரித்தவண்ணம் ஆம் நம்ம எல்லாரும் மகிழ்ச்சியா இருப்போம் எல்லாரும் நமக்கு கை தட்டுவாங்க !!
மதியம் 12 ஆக சிறு பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் அழைத்து செல்ல இவர்களும் உரையாடி பின்னர் வீடு சென்றனர்.மாலை 6 அனைவரும் தயார் நிலையில் ராதிகாவும் தயார் நிலையில் அறையிலிருந்து வெளியில் வர அக்கா நீங்க தயாரா ? நல இருக்கு உங்களுக்கு என்றனர்.அவளோ சின்ன சிரிப்பில் அட நீயும் மிகவும் அழகா இருக்க என்று அத குழந்தையை ஏற்றி தூனில் அமர செய்தது பேசினால்.உடனே மற்றொரு குரல் அக்கா என்று .
ராதிகா திரும்பி பார்க்க சித்தார்த்தின் அதை பொண்ணு ஸ்ரீ அவள் ராதிகாவின் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.ராதிகா ஸ்ரீயிடம் என்ன என்று வினாவ,அவளோ உங்களுடன் யாராச்சும் துணைக்கு வந்தாங்களா அக்கா வீடு செல்லும் போது அவங்கள இன்றைக்கு அடிக்கணும் னு அவங்க பேசிகொண்டு இருந்தாங்க என்றால்.
இதனை கேட்ட ராதிகாவின் பூத்திருந்த முகம் பதற்றம் நிரம்பி போலிவிலந்தது. குழந்தையினை இறக்கி விட்டு.ஸ்ரீ இதனை கூறியதற்கு நன்றி என்று ஷமிரை தேடி சென்றால் அவள் தேடியும் அவனை காணவில்லை ......
தொடரும் நடந்து என்ன என்பதை நாளை காண்போம் !