காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை
கிடைக்கும் என்று எண்ணி
கண்ணைமூடி விழுந்தானே
காதலிலே ஒருவன்.
காதலித்த பெண்ணுக்கு
மூன்று அண்ணன்மார்கள்
மூவருமே ஊர்நடுங்கும்
முரட்டுப் பேர்வழிகள்.
விவகாரம் தெரிந்த பின்னே
விறைத்தெழுந்த அவர்கள்
வீச்சரிவாள் கையோடு
தேடிவந்தார் அவனை.
கிடைத்தவுடன் வெட்டிவிட
வெறிகொண்டு அழைந்தார்.
காதலித்த தொடைநடுங்கி
வெலவெலத்து போனான்.
அவர்கள் வரும்வழியிலொரு
புதரில் மறைந்திருந்தான்.
”எங்கேடா கேடுகெட்ட
அந்த நாய்ப் பையன்
வெட்டி எறிவோம் அவனை
கண்ட துண்டமாக”
என்று சொல்லிக் கொக்கரித்தான்
மூத்த முரட்டு அண்ணன்.
புதரிலிருந்து ஓடிவந்த
காதல் இளவரசன்
பொத்தென்று அவர்கள்
கால்களிலே விழுந்தான்
“அய்யோ சாமிகளே
அண்ணன் மார்களே
தெரியாமல் உம்தங்கையக்
காதலித்து விட்டேன்.
இனிமேல் நான் திருந்தி வாழ
உயிர்ப்பிச்சை இடுவீர்”
கதறினான் கண்ணீர்
வடித்தான் அவர்கள்
காலகளைப் பிடித்துக்கொண்டு.
“கோழை ஒருவனைக்
கொல்வது கேவலம்.
பிழைத்துப் போ நாயே நீ
இவ்வூரை விட்டே” என்று
எச்சரித்து அவ்விடத்தை
விட்டுச் செல்லுமுன்னே
”தூ.. தூ… தூ..” என மூன்றுமுறை
துப்பிவிட்டுச் சென்றார்.
முகத்தில் பட்ட எச்சிலைத்
துடைத்துக் கொண்ட அவனும்
“நல்ல வேளை நானின்று
உயிர்தப்பி பிழைத்தேன்
வீச்சரிவாள் என்கழுத்தில்
பாயாமல் தடுத்தேன்.
கருணையுள்ள முரடர்களும்
இரக்கம் என்மேல் கொண்டு
வெட்டாமல் சென்றதற்கு
நன்றிக் கடனாக காதல்
கத்திரிக்காய் புடலங்காய் எல்லாம்
கனவிலும் இனிநினையேன்.
நல்லவேளை என் காதலுக்கு
செருப்படி இல்லை
காறித் துப்பி உயிரோடு
விட்டதுதான் எனக்கு மரியாதை;
இந்த ஊரில் இனி இருந்தால்
பிணமாகிப் போவேன்.
உயிர்காக்க ஊரைவிட்டு
ஒடுவதே நன்று”
என்று சொல்லி எடுத்தானே
ஒலிம்பிக்கின் ஒட்டம்.
பக்கத்தூர் சேர்வதற்குள்
பதைபதைத்துப் போனான்
பாதிவழி கடக்குமுன்னே
நெஞ்சடைத்துச் செத்தான்.


=====
மீள் பதிவு

எழுதியவர் : மலர் (15-Mar-16, 7:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 295

மேலே