கூட்டுக் குடும்பம் சுகமான காற்று

கூட்டுக் குடும்பம்.... சுகமான காற்று...
---------------------------------------------------------
கூட்டுக் குடும்பம் என்று கூறும் பொழுதே சுகமான காற்று வீசுவதுபோல் உணர்கின்றேன்.... ஆனால், சில சமயங்களில் அது புயல் காற்றாய் வீசும் பொழுதுதான் வருத்தமே...

என்னுடைய அனுபவத்தில் ஒன்று கட்டாயம் இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன்....

கல்யாணம் ஆனதும் ஒரு 1 அல்லது 2 ஆண்டுகள் தம்பதியர் தனிக் குடுத்தினம் செல்வது நல்லது என்பது எனது கருத்து... கட்டாயம் இது அந்தப் பெண்ணிற்கு ஒரு வரப்ப்ரசாதமாய் இருக்கும்... அம்மா வீட்டு பக்கத்திலோ அல்லது மாமியார் வீட்டு பக்கத்திலோ... இந்த நிலை கட்டாயம் மாமியார், மாட்டுப் பெண் இடையே ஒரு பாசம், அன்பு, புரிந்து கொள்ளுதல் , பரிவு ஏற்படும் என்பது எனது எண்ணம்... கூடி வாழவேண்டும் என்ற ஏக்கம் பிறக்கும் விரைவில்... இது உண்மை..

புதியதாய் கல்யாணம் ஆனப் பெண் கட்டாயம் தன் கணவனுடன் வெளியில் செல்ல ஆசைப் படுவது இயற்கையே... இது கூட்டுக்குடும்பத்தில் கொஞ்சம் ஸ்ரமம் தான்... இப்பொழுது கொஞ்சம் நிலைமை மாறி இருக்கலாம்... ஆனால் நான் கூறுவது பொதுவானக் கருத்து....

ஓரிரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தை பிறந்ததும் கட்டாயம் கூட்டுக் குடும்பம் இன்றைய கால கட்டத்திற்கு அவசியம்... மேலும் குழந்தை பிறந்ததும் அதனுடன் தனக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சவோ, நேரம் ஒதுக்கவோ கட்டாயம் கூட்டுக் குடும்பத்தில் இயலாது... வேலைக்கு செல்லும், பெண்ணாக இருப்பினும் இது பொருந்தும்... ஆனாலும், கூட்டுக் குடும்பம் சிறப்பானது.. பொறுமையாய் இருப்பது அவசியம்...

மாமியார் சற்று ஒத்துழைத்தால் கூட்டுக் குடும்பம் போல் எதுவும் இல்லை... மாறாக அவர் கண்டிப்பானவராகவோ, குற்றம் கண்டு பிடிப்பவராகவோ இருப்பின் , தனி குடுத்தினம் நல்லது... மன கலக்கத்துடன் கூடி இருப்பது கஷ்டம்... ஒருவர் முகத்தை ஒருவர் தினமும் பார்க்க வேண்டும்... மனதில் வெறுப்போடு கூடி இருப்பதை விட சற்று தள்ளி இருந்து பாசமாய் இருப்பது மேல்...

கொஞ்சம் குழந்தைகள் வளர்ந்தவுடன் புரியும் கூட்டுக் குடும்பதின் அருமை.. இது உண்மை வெறும் வாய் வார்த்தை அல்ல.. கூடி இருப்பதில் சுகமே... சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க என்ன வழி என்று ஆராயலாம். கொஞ்சம் முயற்சி எடுத்தால் சாத்தியமே..!

எப்பொழுதுமே ஒன்று இல்லை என்றால் தான் அதன் அருமை புரியும்... "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்பார்களே..! அது இந்த விஷயத்தில் உன்மைதான் ...

மாமியார் தன் மகளாய் மாட்டுப் பெண்ணை நினைத்தாலே போதும்... மாட்டுப்பெண் மாமியாரை அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் எந்த ஒரு பிரச்சனையும் விலகும் மேகங்களாய் மறையும் என்பது உறுதி...

கூட்டுக் குடும்பத்தை போற்றுவோம் ....

பாசத்துடன் ----மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (15-Mar-16, 4:02 pm)
பார்வை : 907

மேலே