வானவில்

தூரல் விழும் நேரம் … வானில் வண்ணத்துணி உலர்த்தப் படுகிறது!

காதல் வந்தது போல்…
கன்னி வானம் கன்னம் சிவந்து நிற்கிறது!

ஏழு நிறங்கள் கூட்டணி, பேரழகின் ஆட்சி அமைத்திருக்க...
வாழும் சில கணங்களையும் அது வரலாறாக்கிக் காட்டுகிறது!

இந்த வண்ணப் பூங்கொத்தினைப் பூமிப்பெண்ணுக்குத் தந்து வானக்காதலன் வாழ்த்துச் சொல்லி நிற்கிறான்...

பூமியின்… பூக்களும் …
வானில், வானவில்லும்…
வண்ணத்தாயின் வளர்ப்பு மகள்கள்!

இது நிறங்கள் சேர்ந்து வாழும் செம்மை நாடு..
இங்கு நிறவெறி என்பது ஏது…?

வண்ணத் தோரணம் கட்டியிருக்கிறது வானம்
இந்திர லோகத்தில் விழாக் காலம் போலும்!
.
.மனைவியின் அழகில் மயங்காதவனன் கூட
வானவில்லின் அழகில் சொக்கிப் போய்நிற்க....
பெண்கள் பொறாமைப் படும் பேரழகி
ஆகி விடுகிறது .. வானழகி வானவில்!

எழுதியவர் : பரதகவி (16-Mar-16, 11:42 am)
Tanglish : vaanavil
பார்வை : 558

மேலே