ஒற்றையடிப் பாதை

எதுவரை போகிறது
ஒற்றையடிப் பாதை ,
ஒய்யாரமாய் செல்கிறது
தங்கு தடை ஏதுமில்லை
வாகனங்கள் செல்ல முடியாது
மனிதன் மட்டும் பாதையில்
சுதந்திரம் கொண்ட பாதை
குறுக்கு நெடுக்கும் திரும்பினாலும்
மனிதன் மட்டுமே
அணைத்தபடி நடக்கலாம்
கை கோர்த்த படி நடக்கலாம்
ஆசையோடு பாடிப் பாடி செல்லலாம்
தட்டிக் கேட்க யாரும் இல்லை
தவறு செய்ய எவரும் இல்லை
நல்ல வழி, நல்லவர்கள் நடந்து செல்ல
நம்மவர்கள் அமைத்ததிந்த
ஒற்றையடிப் பாதை
காட்டு வழி ஏதும் இல்லை
திருடர் பயம் ஏதும் இல்லை
அருகருகே நெல்வயல்கள்
பசுமை எனும் காட்சிகளாய்
ஒதுங்கி ஒடுங்கி செல்லாமல்
ஒய்யாரமாய் சென்றிடவே
ஒற்றையடிப் பாதை இது ,
நெற் பயிர்கள் தலையாட்டும்
காற்றில் அவை இசை பாடும்
கேட்டு கொண்டே சென்றிடலாம்
பாசம் அன்பு அனைத்தும் இந்தப்
பாதையிலே அனுபவிப்போம்
குளிர் வாடை மேனியிலே
கூடி வரும்
இவ் ஒற்றையடிப் பாதை

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Mar-16, 6:20 pm)
பார்வை : 215

மேலே