கதவுகளை மூடிக்கொண்டோம்-சுஜய் ரகு

வெட்டத் துணிந்தவர் நீங்கள்
மரங்களா? மனிதனா? வேறுபாடு என்ன ?
வெட்டுவது உங்கள் "வேதம்"
அந்த வேதம் கற்பிப்பது "வேற்றுமை "
உங்களின் "ஸ்கெட்ச்"யுக்தி
நிச்சயமாக காட்டுமிருகங்களிடம் இல்லை
அந்த மிருகங்களுக்குப் "பசி"
உங்களுக்குப் "பகை"
இன்று உங்கள் சட்டையில் தெறிக்க
நாறுகிறது மானுடக் குருதி
நாளையதைக் குடித்தும் கும்மாளமிடுவீர்கள்
சொல்லிக்கொள்ளுங்கள் நீங்களாக
நாங்களும் மனிதர்கள் என்று
ருத்ர தாண்டவத்தை வேடிக்கை பார்ப்பதால்
வித்தியாசம் தெரிவதில்லை எங்களுக்கும் உங்களுக்கும்
இதோ எங்கள் பிள்ளைகளும் கற்றுக்கொள்கிறார்கள்
கையடக்க அலைபேசி வாயிலாக
நிராயுதபாணி மீதான எல்லைமீறலையும்
"தெருக்கதைகள்" எனும் அலச்சிய துஷ்டங்களையும்
யாரேனும் விளக்குங்களேன் ....
வீதிச் சாக்கடை வீட்டுக்குள் நாறவா செய்கிறது
கதவுகளை இழுத்து மூடிக்கொண்டால் ..........!!

எழுதியவர் : சுஜய் ரகு (17-Mar-16, 2:53 pm)
பார்வை : 107

மேலே