உனக்கும் எனக்கும்

சற்றே குழைந்தாற் போல்
வடித்த சோற்றில் தயிரிட்டு உண்ண
உனக்கும் பிடிக்கிறது எனக்கும்
பிடிக்கிறது ....

அதிகாலை அவசரத்தில் அத்தனை
முறை புன்னகைத்து நம் போக்கை
இலகுவாக்க உனக்கும் பிடிக்கிறது
எனக்கும் பிடிக்கிறது....

நாம் களைத்தோய்ந்து வீடு திரும்ப
என் தூக்கம் உனதாக்க உனக்கும்
பிடிக்கிறது எனக்கும் பிடிக்கிறது....

அம்மெல்லிய ஒளியில் ஒன்றா
இரண்டா ஆசைகள்... " கூவும்
அலாரம் அணைத்து ஒரு பெட் காபி
தர உனக்கும் பிடிக்கிறது எனக்கும்
பிடிக்கிறது.....

விடுமுறை மாலையின் மடியில்
நம் கிராமம் நோக்கி அலை பேச
உனக்கும் பிடிக்கிறது எனக்கும் பிடிக்கிறது...

சாதி கெட்டதுங்க" என்ற
சொல் பிடித்து தனித்து வந்த
இ்ந்நகர மூன்றாண்டில் எங்கும்
என் கைக்கூட்டுக்குளிருக்கும்
உன் விரல் இசைக்கும்
உலகமெல்லாம் எனக்கும் பிடிக்கிறது
அப்படியே உனக்கும் பிடிக்கிறது....

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (17-Mar-16, 7:45 pm)
Tanglish : unakkum enakum
பார்வை : 321

மேலே