பயணம்
அம்மா எனும் அலறல் சத்தமின்றி
அறுவை சிகிச்சை என்ற பயமின்றி
108 வண்டி ஏதுமின்றி
மருத்துவமனை வசதியின்றி
யாருமற்ற அனாதையாய் அமைதியாய்
முடிந்த பிரசவத்தோடு
தன்னைதானே
உடைத்துக் கொண்டு
துணிவோடு விண்ணைத் தொடும்
விதைகளாய்
பயணம் செய்வோம் நாமும்...