தினம் ஒரு காதல் தாலாட்டு ஜோடி பாடல் 11 = 43

“இளம் பிறையே ! இளம் பிறையே !!
எழுதட்டுமா என் உரையை..?
என் எழுத்து உன்னை
அலங்கரிக்கும் ஆருயிரே !”

“வளர் பிறையே ! வளர் பிறையே !!
வழங்கட்டுமா வாழ்த்துரையை ?
உன் எழுத்து என்றும்
சோடை போகாத கடல் அலையே !”


நிலவதுவின் நிஜப் பிறையே
நான் எழுதியது ஒரு முறையே

நீரில் பிறை மிதப்பதுப் போல்
என்னை உன்னிதழில் நீந்த வைத்தாயே !

நீ நீந்தும் பொழுதினிலே
என் நெஞ்சம் குளிர்கின்றது

உறவாடும் கண்கள் மட்டும்
இரவினில் உறங்க மறுக்கிறது

முழு இன்பம் கண்டாலும்
முடிவதில்லை மோகங்கள்

சுதியோடு மீட்டாலும்
தீர்வதில்லை ஆசைகள்


ஆண் பாதி பெண் பாதி
காதலிலே சம நீதி

ஊடலிலே பெண்களுக்கே
மோகம் முழு பாகம் !

காதலென்பதை பொய்யென்றால்
தேய்பிறையும் தாங்காது

மோதலில்லா காதலென்றால்
ஊடல் புரிந்தாலும் சிறக்காது

ஏழு வகை கண்டங்களும்
அடிக்கடி எழுதுவது

நூறு சதவிகிதம்
காதல் கதைகளைதான்...!

எழுதியவர் : சாய்மாறன் (20-Mar-16, 12:00 pm)
பார்வை : 101

மேலே