உங்கள் கைகள் தான் அவை

பக்கத்து சீட்டில்
அவளோடு அமர்ந்து
வந்தவன் தன்னிச்சையாக
புன்னகைத்து சென்றான்,
அவனது நிறுத்தம்
வந்து இறங்குகையில்.
மறு புன்னகை
உதிர்த்தவளை விட்டுவிடுங்கள்.
இதோ ! உங்களில்
இவனற்ற ஒருவர்தான்
அவளுக்காக காலி சீட்டில்
அமராமல் பயணிக்கிறீர்.
பெண்மை ஏந்தும்
உங்கள் கைகளில்தான்
எத்தனை ஓட்டைகள் !

        -முருகன்.சுந்தரபாண்டியன்

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (20-Mar-16, 10:52 am)
பார்வை : 79

மேலே