சிதைந்தது இதயம்
பிரிந்து நிற்கும் ஆன்மா, மனமாய்.
வரிந்து எதிர்க்கும்.
ஆன்மாவிற்கு அன்பின் ஊற்று,
அழிவேஇல்லாமல்.
பிரிந்து கிடக்கும் மனமன்றோ
பிரச்சனையின் மையம்.
சிலசமயம் ஆன்மாவின் ஆறுதல்
வார்த்தைகளை மனம் மறுத்து நிற்கும்.
முழுமையாய் இந்த மனத்தை
உன்னால் மட்டுமே சிதைக்கமுடியும்.
உடைந்துச் சிதறி சிதைந்த மனம்
சிந்திக்கும் திறம் அன்றி.
மறைந்து கதறி நின்று
வந்திக்கும் உன் அன்புக்கு நன்றி.
மறக்கமுடியவில்லை என்றாய்,
திறக்கமுடியவில்லை என் சிதைந்த
மனத்தை.
நடந்து கடந்தது முள்ளிலேயேயானாலும்,
முள் தைத்தது என்னவோ என் இதயத்தில்.