விளைவுகள்
இதயத்திற்கு கற்றுக்கொடுக்க நான் ஒன்றும் காதல் ஆசிரியன் அல்லவே!
புயலில் சிக்கிய இழப்புக்கு உன் காதலுக்கு
மரியாதை மட்டுமே.
மனம் உடைத்த அதன் நினைவுகளுக்கு
சாத்தியமில்லை மறுவாழ்வு.
மறக்க மனமில்லை உனக்கு,
மறுபடியும் சந்திக்க இதயமில்லை எனக்கு.
கனவுகளிலேயே களிக்க நிலையில்லை.
கண்டதில் அடங்க ஒப்பமில்லை.
வாழும் இந்த விழைவே வீழ்ந்து
கிடைத்த வினைகளின் விளைவு.