கொட்டிய தேள்

பதிந்து நிற்கும் பாதச் சுவடுகளை
பக்கம் சென்று பார்.

பதில் சொல்லும் அது உன்மீது நான்
கொண்ட காதலின் கணத்தை.

எத்தனை முறை தொலைத்துத்
தேடியிருக்கிறாய் நினைவு கொள்.

தேளாய் இருப்பினும் ஒருமுறைதான்
அது கொட்டிநிற்க்கும்.

எண்ணிப்பார் எத்தனை முறை
நீ கொட்டியிருந்தாலும் உன்னுடனேயே
இன்னும் நான்.

எழுதியவர் : jujuma (17-Jun-11, 2:49 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 262

மேலே