சாட்டிலைட்_கவிதைகள் 6 - கிளம்பியது பி101 சாட்டிலைட்
வா வானம் மேயலாம்..
நாம் காணும் நிலவும் காயலாம்...
வால்தனில் தீயிட்டு ...
வான்தனில் ராக்கெட்டு...
ஏறி போவோம்..
ஏழரை சனியை படமெடுப்போம்...
பெரும் வெளியில் பெருமையாய் மிதப்போம்..
விண்வெளியில் விதை விதைப்போம்..
காயம் பட்டால்....
நிலா மருத்துவமனையில் ...
வெண்மேகம் மருந்தாய் பூசுவோம்...
ஆடைகள் எடுத்துகொள் ...
வேற்றுகிரகவாசிக்கும் மானம் வேணும்...
மனம் எடுத்துக்கொள்...
முன்னோர்களுடன் அன்பு பாராட்ட...
பணம் எடுத்துக்கொள்...
மனிதர்கள் இருந்தால் கொடுக்க...
மேலும் தேவையன எடுத்துக்கொள்...
அட அறிவையும் கூட எடுத்துக்கொள்...
இன்னும் இருந்தால் ...
இதயம் எடுத்துகொள்...
அங்கேயாவது காதல் செய்ய...
சில புல்செடி எடுத்துக்கொள்...
அங்கே புல்வெளி உருவாக்கலாம்...
ஆம் அந்த கேமிரா எடுத்துக்கொள்...
விண்மீன்களுடன் செல்பி எடுக்க....
உன் பேஸ்புக் அக்கவுண்ட்
இன்னும் சரியா இருக்கா...
பார்த்துக்கொள் ...
செல்பிக்கு லைக்ஸ் வருமில்ல..
சரி கவுண்டவுன் ஆரம்பிருச்சி...
சரி எல்லாருக்கும் டாட்டா ...
வாலில்லிட்ட தீபரவி வீர்....
கிளம்பியது பி101 சாட்டிலைட்... இரண்டு ஆட்டுகுட்டிகளுடன்....
#சாட்டிலைட்_கவிதைகள்... 6