சாட்டிலைட்_கவிதைகள்_9 -- பூமியின் விரகதாபம்
நாட்கள் நகர்வதில்லை நடுவில் நீ நிற்பதால்....
நிலவுக்கு எனக்கும் தூரங்கள் அதிகரிக்கிறது இடையில் நீ நிற்பதால்...
இரவுக்கும் என்க்கும் முடிவிலா பந்தம் தோன்றியது இங்கே நீ நிற்பதால்...
பகல் என்றொன்று இல்லாமல் போனது அருகில் நீ நிற்பதால்...
சில நாள் முன் நீ என்னை சுற்றி வந்தாய்...
எத்தனை நாள் இப்படி சுற்றுவாய் என்றிருந்தேன்...
எப்படியோ என்னை நீ உன்னை சுற்ற வைத்தாய்..
எவ்வளவு காலம் தான் நீயே சுற்றுவது இப்படி சில காலம் நிற்பாய்...
என்னால் முடிந்தவரை உன்னை நான் சுற்றுகிறேன்...
வரமாே வாழ்க்கையோ வேண்டியல்ல...
சுற்றுவது என்வாழ்நாள் ..... அல்லது என் எதிர்காலம்.....
மற்ற மாந்தர்களை கேலி செய்தேன்..
காதல் என்னை தாக்கி பழி தீர்த்துகொண்டது...
என்னை நீயும் உன்னை நானும் சுற்றும் சுழற்சியே ..
நம் அன்பின் அடையாளம்...
பத்திரிக்கைகளில் நீ எடுத்த என் புகைபடம் காட்டியது என் அழகை எனக்கே புதியாய்....
இயல்புகள் எல்லாம் திரியும் போது...
பிரபஞ்சவெளியில் நீயும் நானும் கொஞ்சி குழாவும் கனவு எனக்கு...
பால்வெளி மண்டலமே எழுந்து தடுத்தாலும் ...
பக்கத்து மண்டலத்தில் பக்குவமாய் வாழ்வோம்...
என் மின்னஞ்சல்களை படிக்க உனக்கு நேரமிருக்கிறதோ .... என்ற சந்தேகத்தால் தான் இக்கடிதம் உருவானதோ...
தெரியவில்லை காரணம் தேவையில்லை...
உனக்காய் இன்னும் சில யுகங்கள் காத்திருப்பேன்
என்பதே இக்கடிதத்தின் உள்நோக்கம்...
முடியவில்லை என்னால் இந்த விரகதாபத்துடன் போராட...
உன் நினைவுகளை ஆயுதமாய் ஏந்தி நிற்கிறேன்...
சிரிக்கிறது எதிரிருக்கும் விரகதாபம்...
ஆம் நான் ஏந்தும் ஆயுதமே என்னை வதைக்கிறது..
மடியவில்லை என் வீரம்...
இன்னும் சில மாதங்கள் தாங்கும் அதற்குள்
ஒரு பதில் நீ அனுப்பிவிடுவாய்..
என்றே காத்திருக்கிறேன்... உன்
பணிகள் முடித்து ஓயும் வேளையில்
முடிந்தால் பதில் அனுப்பு...
பூமியின் விரகதாபம்.... #சாட்டிலைட்_கவிதைகள்_9