மருதநாயகம் பாடலுக்கு எனது வரிகள் அந்த ட்யூன்ல பாடிபாருங்க

மருதநாயகம் பாடலுக்கு எனது வரிகள்... அந்த ட்யூன்ல பாடிபாருங்க...




இறையொன்றை தேடுது இங்கே... மனம்.
இறையாகி போனதோர் மிருகமும் இங்கே..

கறைபட்டு கறைபட்டு தானே... மனிதம்
கரைதேடி கடல்மூழ்கி சிறைபட்டு சிதைகிறானே..

மனசொன்னு இல்லாம போச்சோ.. இல்ல
ஈரமாய் ரத்தம் தான் ஊறியே போச்சோ...

கல்போல கிடக்குதே சாதி.. அதை
கறைத்திடும் எறும்புக்கும் போனதோ சேதி...
...

பெரும்பாறை கடல்பட்டு உருகுதே... அதுபோல்
பெருங்குணம் சிறிதேனும் உருகிவிழாதோ..

சாதிக்க சமயம் பத்தாதே.. அதில்
சாதியின் பேர்சொல்லி பதற்றுகிறானே...

.....

இமயத்து ஈசனும் கூட... இங்கே
இடுகாட்டு பிணம்சுட்டு பிழைத்திருக்கானே..

இதயத்தின் நேசங்கள் கூட.. இங்கே
இடுகாட்டு பயணத்தை விதித்திருக்கானே...

தேசங்கள் எப்போது கூடும்... மனித
சாதிகள் எப்போது ஓடும்...


விடையின்றி வாழ்வதா வாழ்க்கை... வந்து
விடையொன்றை உண்டாக்கி உலகமைப்போமே...

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (22-Mar-16, 1:24 pm)
பார்வை : 139

மேலே