ஆறுவது சினம்
எவ்வளவுதான் அடக்கினாலும்
சினம் தனது குணத்தை காட்டிவிடுகிறது!
தகராறு முத்த முத்த
சினம் சிரத்தின் மீதேறி சத்தாய்க்கிறது..!
தியானம் செய்துக் கொண்டிருக்கிறேன்
குளியல் அறையிலிருந்து மனைவி குரல் கொடுக்கிறாள்
ஏங்க…! சாதம் வெந்துடுச்சா பாருங்க….!
பூஜை செய்துக் கொண்டிருக்கிறேன்
டீவி வால்யூமை அதிகரித்தபடியே மகன் கத்துகிறான்
அப்பா..! சீக்கிரமா டிஃபன் எடுத்து வைய்யுங்க….!
அலுவலக நிமித்தமாக
அவசரமாக சென்றுக் கொண்டிருக்கிறேன்
சிக்னல் விழுவதற்குள் குறுக்கே புகுந்த
எதிர் வண்டிக்கரான் - என்னை
அபத்த வார்த்தைகளால் அர்ச்சணை செய்கிறான்!
மதிய உணவுக்காக அகோர பசியோடு
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்
இடையில் வழி மறைத்த போலீஸ்காரர்
ஆவணங்களை காட்டச்சொல்லி
அவருக்கேவுரிய ஆணவக்குரளோடு
என் பசியை அவர் வாங்கி தின்கிறார்..!
இன்றுபட்ட கஷ்ட்டத்தின் அசதியில்
அசந்து கண்ணயர்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்னமா கண்ணு சவுக்கியமா என்று
செல்பேசி - காலர் டீயூனில் நலம் விசாரிக்க
எடுத்து யாரென்று கேட்கப்போனால்
கணினி பதிவு குரலில் - ஜனனி ஒருவள்
2ஜி 3ஜி அதிரடி ஆஃபருக்கு
அடுத்த பொத்தானை அழுத்தி காத்திருங்கள்
எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி
உங்களை தொடர்பு கொள்வார் என்கிறாள்..!
இப்படியாக என்னை உசுப்பேத்திவிட்டு
சினமானது என்னை ரணவாதியாக்கி
ஆறுவது சினம் என்கிறது! நான் எப்படி ஆறுவது..?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
