கத்அ
1
ஆசைக் கொள்வதில் பாவம் இருக்காது
ஓசைச் செய்வதில் தவறும் விளையாது
இனிமை மனதுக்குத் தேவை என்றென்றும்
சங்கீதம் கேட்க தயங்கிடக் கூடாது
2
நதி புரண்டு புரண்டு போகுது
அதனால் பெரிய பலன் சேருது
இது தெரிந்த பின்பும் இதயம்
நதி போல் வாழ மறுக்குது
3
எங்கிருந்தோ ஒரு கடிதம் வந்தது
பிறித்து படிக்க இதயம் சொன்னது
கட்டியே பொட்டது வாழ்க்கை என்னை
பிறகு என் சுதந்திரம் பறிபோனது
4
மதி மகவும் நன்றாக வேலை செய்தது
மனதும் இஷ்டம் பொல் போகவே பழகியது
வேண்டியவை எத்துனையோ வந்தும் கூட
நிம்மதி மட்டும் கிடைக்காமல் இருக்கிறது
கத்அ-
என்பது கஜல் மற்றும் ருபாயீ போன்று ஒரு ஃபார்சீ கவிதை வடிவம்.
கத்அ- அடியீற்று ஒலி இயைபு கொண்ட 4 வரி கவிதை வடிவம்.. ருபாயீ பஹர்கள் (சந்தங்கள்) களூக்கு வெளியே எழுதப்படுபவை கத்அ என்று அழைக்கப்படிகின்றன.
தமிழில் ருபாயீ களும், கத்அ களும் எனக்கு முன்பு யாராவது எழுதி இருக்கிறார்களா என்பது பற்றி எனக்கு தெரிய வரவில்லை…
எனது முயற்ச்சி களுக்கு உங்களது ஆசிகளை வேண்டுகிறேன்..