என் காதல்

அவள்: காணாமல் விலகி நடந்த
கால்கள் இரண்டும் -இன்று
கதவோரம் சாய்ந்து நிற்கின்றன
கணவனாய் நீ வர காத்திருக்கின்றன.
காதலில் விழுந்தவள் எழுவதில்லை
என்றறிந்து விலகி நின்றவள்-இன்று
உன் காதலில் விழுந்தேன்.

நான்: சுற்றித் திரிய ஆசையில்லை
சொந்தபந்தம் தேவையில்லை
சோதனை வந்தாலும்
வேதனை தந்தாலும்
இம்சைகள் செய்யும்
என் இதயம் ஏங்கும்
நீ வேண்டுமென்று .....
கற்பனையில் பகல் பொழுது
கனவுகளில் இரவுபொழுது-என்று
காலங்கள் மாறினாலும்
என் நினைவெல்லாம்
நிறைந்திருப்பது நீ ஒருத்தி மட்டுமே...

அவள்: நீ தொடர்ந்து வந்தாய்
உன் பார்வையினாலே -நான்
சென்ற வழிகளில் மட்டுமல்ல
என் மனதிலும் தான்.
என்னுள் பதிந்தது-உன்
கால்தடம் மட்டுமல்ல
நினைவுகளும் தான்...

நான்: பரந்து விரிந்திருக்கும்
வானத்திற்கும் இருகுணம் உண்டு
சித்திரையில் வெயில் அடிப்பதும்
ஐப்பசியில் மழை கொடுப்பதும் என்று,
கையளவு இதயம் படைத்த
உனக்குள்ளும் நான் இருகுணம் கண்டேன்.
அன்று விலகிச் சென்றவள்
இன்று விரும்பி வந்தாய்.
உன்னை கண்டதும்
உணர்ந்து கொண்டேன்
காதலும் கடலும் ஒன்றுதான்
மூழ்கித் தேடுபவன் மட்டுமே
முத்தெடுக்கின்றான் என்று...

அவள்: நான் தூரச் சென்ற பொழுதெல்லாம்
நீ துரத்தி வந்தாய்,
நான் விலகி சென்ற பொழுதெல்லாம்
நீ விரும்பி நின்றாய்-இனி
என் நிழலும் துடித்துக்கொண்டிருக்கும்
உன் நிழலைத் தொடர....

நான்: அடி ஊமைப் பெண்ணே!!
உன்னால் கண்டுகொண்டேனடி
மண்ணில் விழுந்தவன்
எழுந்து விடுவான்-பெண்
கண்ணில் விழுபவன்
எழுவதில்லை என்ற
உண்மைதனை .....

அவள்: கனவிலும் தொடரட்டும்
நம் கணவன் மனைவி உறவு ..
சுற்றமும் சூழ்ச்சமும்
நம்மை பிரிக்க நினைத்தாலும்
காலமும் சுமப்பேன்
நம் காதலின் நினைவுகளை
உன்னுள் இருந்து...................




குறிப்பு:
[வாசகர்களே ! இவை எங்களின் உரையாடல். பிழையேனும் இருப்பின் மன்னிக்கவும் ]

நாகேஸ்வரி பிரபுகுமார்

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபுகுமார் (26-Mar-16, 10:58 am)
சேர்த்தது : PrabhuNagu
Tanglish : en kaadhal
பார்வை : 125

மேலே