நோன்பு காலச் சிந்தனையில் சில26-03-2016

26—03—2016:
ஊளைச் சதை,கோபம்
உடனகற்றி
மகிழ்வாற்று!
----
அன்பகத்தில்லா நோன்பு
வன்பாலை
பெய்த மழை!;
--- ---
நிந்தனை புகழில் மயங்காதே!
நீயா யிருந்து
நிறுவு!
--- ---
செய்வ தறியார் இவர்பாவம் எல்லாமும்
அய்யா!நீர் மன்னித் தருளுமெனச் சொன்னார்!
பொய்யா இவரன்பின் புனிதம் தினமெண்ணி
உய்யா மனமுண்டோ? உய்யபிற வழியுண்டோ?
--- ---
ஒலிகண்டு பொருள்கண்டு மொழிகண்டு தான்செய்த
சலியாத முயற்சியில் சாத்திரங்கள் பலகண்டும்
வலிகொண்ட சிலுவை வாழ்க்கைதனைப் புரியாதேன்
நிலைகண்டு மாற்றமதை நீயனுப்பும் இயேசுவே!
-- --
உண்ணாதிருப்பது உபவாசமும் அல்ல;
உயிரோடிருப்பது வாழ்வதும் அல்ல!
--- --
பங்கும் சுதந்திரத்தின் பாக்கியமே!
தங்கும் சுய
கட்டுப்பாடால்!
--- ---
வேற்றுமை நீக்கி
ஆற்றி இருப்பார்
வேதனை தவிர்த்து வாழ்வார்!!
--


தெருச்சபையாய் நீதிருந்து
விளங்க வேண்டும்
திருந்துகின்ற மக்களிங்கு
பெருக வேண்டும்!

பங்கினைச் செய்து
பணிவுடன் நடந்து
பரமனின் அருனிலில் கூடு!
தங்கிடும் அமைதி
தளர்வுகள் நீங்கும்
தாழ்வினை விட்டுமே ஓடு!
--
ஆழ்ந்து கேட்டு
வாழ்ந்து காட்டு
தாழ்ந்து போக மாட்டாய்!
சூழ்ந்து நிற்கும்
பகையும் மாறும்
சுதனின் வாழ்வைப் பாராய்!
--

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (26-Mar-16, 9:00 am)
பார்வை : 57

மேலே