என் அப்பா

நான் பிறந்த செய்தியை உனக்கு
சொல்ல பொன் இல்லை பெண் தான்!

நான் சிறுவயதில் செய்யும் சேட்டைகளை
ரசிக்கும் முதல் ஆண்!

என் கோவம், திமிரு அடங்காதனம்
அனைத்தையும் பொருத்து போகும்
தந்தைதனம்!

வெவ்வேறு குழந்தை பார்த்தால் இவள்
என் மகளை போல் இருக்கிறாள்
என்று கூறும் அப்பாவி தனம்!

என் முகம் வாடிய பொழுதில்
என் அம்மாவை திட்டும் போதும்
என் இதழ் விரிய காணும் ரசனைத்தனம்!

நான் தடுமாறிய பொழுதெல்லாம்
தட்டிக்கொடுத்து எழுப்பிய அப்பா!

என்னை குடும்பத்தார் திட்டும் போது
என் மகளை திட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறும்
அதிகாரத்தனம்!

என் சமையல் நல்லா இல்லாத பொழுதும்
நல்லா இருக்குமா! என்று கூறும் என்
அப்பா!

அடுத்தடுத்த ஜென்மத்திலும்
நான் உன் மகளாக வேண்டும்!

எழுதியவர் : vviji (26-Mar-16, 8:48 am)
Tanglish : en appa
பார்வை : 145

மேலே