குத்து பாட்டு -1 ஜோடி பாடல் 17 = 49

அம்மன் கோயில் திருவிழாவில் ரங்கராட்டிணம்
அதுக்கு நாலு சக்கரம் !
அத்தை மகளே வா சீக்கிரம்
அய்த்தான் குதிரை ஓட்டனும் !

அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய் ஓய்
அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய் ஓய்

குதிரை ஓட்டும் மாமனே ஏன் அவசரம் ?
கொஞ்சம் பொறு நான் பாக்கனும்
நீ மெல்ல ஓட்டனும்
அப்புறம் வேகம் கூட்டனும் !

அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய்..! ஓய்...!!
அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய்..! ஓய்...!!நான் ஓட்டும்போது வெடிக்கும் ஊசிப்பட்டாசு
அது வெடிக்க வெடிக்க நீ என்னை ஒராசு !

அதுக்கென்ன ராசா ஒராசுறேன் லேசா
உன் இஷ்ட்டம் போல நீ ஓட்டு சொகுசா !

அல்லி மலர் ராணி - ஆயில் இப்போ காலி
அரை மணி நீ பொறு உற்பத்தி ஆகட்டும் !

அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய்..! ஓய்...!!
அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய்..! ஓய்...!!

மாராப்பு காத்தோட ஆட
மாமன் அதை பாட
மாதுளை தாயேன்டி திங்க
மனம் - பொங்க..! பொங்க!! பொங்க!!!

தென்பாண்டி காளை ஒண்ணு மோதி
அது சொல்லுது நல்ல நல்ல சேதி
சம்பங்கி பூஞ்சரத்தை வாங்கி
தலை நிறைய வைக்குது கோதி! கோதி!! கோதி!!!

அடுக்கு மொழிப்பேசும் சுந்தரியே - உன்
இடுப்பளவு எவ்வளவு தெரியலையே
சொன்னாக்கா எனக்குத் தெரியும்
ஆயித்த ஆடை உனக்கு கிடைக்கும்..!

அட அளக்க இப்போ நேரமில்லே..
என் வழக்கு இன்னும் தீரவில்லே
குத்து மதிப்பா கணக்குப் போட்டு
அத்தனையும் வாங்கிவந்து சூட்டு.. !

அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய்...! ஓய்..!!
அஜக்ச்சா- அஜக்ச்சா- அஜக்ச்சா- ஓய்..! ஓய்...!!

(இந்த படைப்பு நான் திரைத்துறையில் வாய்ப்புக்காக அலைந்தபோது ஒரு பொழுது போக்குக்காக எழுதப்பட்டது, யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.)

எழுதியவர் : சாய்மாறன் (26-Mar-16, 7:07 am)
பார்வை : 177

மேலே