அணையட்டும் சாதீ

பாழாய்ப்போன சாதிவெறி -
பள்ளியிலே தொடருதே !
பகைமட்டும் தீரல -
பசுமையாக வளருதே !

சாதி பேரைச்சொல்லியே -
சர்க்காரும் நடக்குது !
எதிர்த்து கேட்ட யாவரையம் -
எதிரியாக பார்க்குது !

சனமெல்லாம் சாகுதே;
சாதி வெறியில் கருகுதே !
எறியும் நெருப்பும் அணையுதே;
ஏழு ஜென்மம் தொடருதே !

இலக்கு வைத்து அழிக்கிறான் !
இன வெறியில் அலையிறான் !
இதயம் ஒன்று இருப்பதையும் -
இருட்டுக்குள்ளே அடைக்கிறான் !

நெருப்பை விட வேகமாக -
உலகெங்கும் பரவுது !
நெருங்கி செல்லும் யாவரையும் -
நேர்வழியும் மறைக்குது !

காட்டுத்தீயாய் பரவுவதை -
கட்டுக்குள்ளே வைத்திட !
கருணை உள்ளம் வேண்டியே -
கடவுளிடம் கை ஏந்துவோம் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (27-Mar-16, 10:04 am)
பார்வை : 78

மேலே