நடுத்தர வர்க்கம்
நடுத்தர வர்க்கம்
*******************
பரபரப்பான சாலை....
அதுல ஓரமா கிடக்குது...
கசங்கிய பத்துரூபாய்...
அந்த வழியா வந்த....
ஒரு பணக்காரன் அத...
பார்க்கிறான்...
அவன் கையில...
எப்பவும் குறைஞ்சது பத்தாயிரம்...
இருக்கும்...
அதனாலவோ என்னவோ....
அந்த பத்துரூபாய...
அவன் கண்டுக்கல....
அடுத்து...
கொஞ்சம் வசதிபடைத்தவன்...
பார்க்கிறான்...
அவன் கையில் எப்பவும்...
ஆயிரம், ரெண்டாயிரம் இருக்கும்....
அவன் அந்த பத்துரூபாயை...
பார்த்தான் ஆனா...
எடுக்க மனசில்ல....
அடுத்து...
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த...
ஒருத்தன் வாரான்...
அவன் கையில்....
எப்பவுமே...
நூறு, இருநூறுக்கு மேல...
இருந்ததில்ல....
அவன் கண்ணுல...
அந்த பத்துரூபாய் படுது...
எடுக்க மனம் இருக்கு...
சுத்தி முத்தி பாக்குறான்...
யாராவது பாக்குறாங்களான்னு...
அந்த இடத்துலேயே....
பத்து நிமிடம்...
அங்கிட்டும்...
இங்கிட்டுமா...
பூனை குட்டிபோட்ட மாதிரி...
நடந்துக்கிட்டே இருக்கான்...
குனிஞ்சி எடுக்க...
ஒரு நிமிடம் கூட ஆகாது...
ஆனா எடுக்க வழியக்காணோம்...
காரணம்....
யாராவது பார்த்திட்டா
என்னாவது....
அவன் கொஞ்சம்....
கவுரவம் பாக்குற ஆள்...
கடைசி வரைக்கும்...
அவனால அந்த...
பத்து ரூபாய எடுக்க முடியல...
வேற வழியில்லாமல்
கிளம்பிட்டான்...
அடுத்து எடுக்க யாரும்...
வரல...
அந்த பணம்...
அதே இடத்துல...
கிடக்குமான்னும் உறுதி இல்ல...
இரவு நேரம்...
படுக்கும்போது...
பணக்காரனுக்கு...
அத பத்தின நினைப்பு இல்ல....
கொஞ்சம் வசதிபடைச்சவனுக்கு....
அத பத்தின யோசனையில்ல...
நடுத்தர வர்க்கத்தவனுக்கு...
தூக்கம் வரல. ..
"சே... கொஞ்சம் முயற்சி...
பண்ணியிருந்தா அத...
எடுத்திருக்கலாமே"ன்னு...
மறுநாள்...
அந்த பக்கம் போகும்போது...
மனம் சொல்லுது....
கண்ணு தானாவே திரும்புது...
அந்த பணம்
கிடந்த பக்கம்...
அந்த பத்துரூபாய
எடுத்திருந்தாக்கூட...
சந்தோஷப்பட்டு இருந்திருக்கமாட்டான்...
எடுக்காமல்...
வருத்தப்பட்ட அளவுக்கு...
மறந்திருப்பான்...
அந்த சம்பவத்தையே.....
இந்த...
நடுத்தர வர்க்கத்தில்...
வாழ்பவன்...
இவண்
க.முரளி (spark MRL K)