வானவில் தோட்டம்

நீல வானத்தில்
கருமுகில் கூட்டம்
அதில் வானவில்
போடுது வண்ணத் தோட்டம் !

செவ்விதழ் ஒரு
சித்திரக் கூடம்
அதில் புன்னகை
வரையுது வண்ண ஓவியம் !

கண்கள் இரண்டும்
தாமரைக் குளம்
அதில் கவிதை
பாடுது எந்தன் நெஞ்சம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-16, 7:15 pm)
Tanglish : vaanavil thottam
பார்வை : 709

மேலே