எழிலே தமிழே வாழியவே ---வளர்த்திடும் என்தமிழேதமிழன் நான் » தமிழ் மொழி - பதிவு
தனையே தருமுயர் தாயின் பரிவே!
நினைவே நெருப்பின் நிழலாய் எரிய,
வனைந்து வளர்க்கும் வளமை வடிவே;
பனித்துளி பூத்த பசுமைப் படர்வே!
கனிமலைத் தேறல் கனிவே! புலவர்
புனைகவிச் சாரல் பொழிவே! புவியில்
எனையே உயர்த்து மெழிலே! தமிழே!