ஒன்றே குலம் ஒருவனே தேவன்----------------------------------படித்த கவிதை மணி
ஆறுகள் பலவாயினும்! சேரும் இடம் கடல்
மதங்கள் பலவாயினும் ஒருவனே தேவன்
மண்ணின் மனிதகுலம் ஒன்றே!
அன்பெனும் இறைவனைத் தொழுகின்றோம்
அன்பிற்கு ஏது? கீழோர்? மேலோர்?
நட்டக் கல்லை கும்பிட்டு நாலு புஷ்பம் சாற்றுவதா?
நம் மக்கள் வறுமையில் வயிறாற உணவிடு
நாலு இதயம் உன்னை வாழ்த்துமே! வணங்குமே!
பாலில்லா குழந்தைக்கு பசி நீக்கும் நீ தெய்வம்
பாலாபிஷேகம் செய்து குறுவட்டம் இடுவாயோ?
உலகம் உன் சேவைக்கு வாசல் திறந்து காத்திருக்கும்
உலக மக்கள் இதயமன்றோ! இறைவன் கோயில்
உன் மொழி – என் மொழி – எது பெரிதோ?
அன்பின் மொழி பசியாற்றும் உயிர்கள் வாழ
அது எம்மொழியோ, அது புரிதல் மொழி
உன் உதிரம் சிகப்பென்றால் என்னது கறுப்பாமோ?
உடை வாழ் கொண்டு வெட்டி மாண்ட மனிதர்கள்
உன் குலம் பெரிதன்றோ! என்குலம் சிறிதன்றோ!
பசிக்கு ஏது குலம் பண்பாளர் பாட்டினிலே
நீ நினைத்தால் நல்ல செயல் தொண்டாகும்
நீ நினைக்காத அருளும் வசமாகும் விரைவினிலே
நீ வணங்கும் தெய்வமாய் உன்செயல் அன்றோ
கை வணங்கும் மனிதரெல்லாம் உன்னை தேவன் என்பார்
உன் குலம் ஒன்றேயது அருளும் குலம்
ஒருவனே தேவன்! இறைவன் துணை நிற்பார்!
– கவிஞர் நா. பேபி உமா, பி.லிட்.எம்.ஏ.
கானகம் தரமணி, சென்னை
*******