புமனிதன்

(பு)மனிதன்
===========
முடியாது.,
என்பது
மனிதனுக்கு கிடையாது.

அனைத்தும் முடியும்,
என்றால்
இவ்வுலகுக்கு பொருந்தாது

முடியாது.,
என்பது
மூடர்களின் அகராதி

நான்தான் முடிப்பேன்
என்பதே
பலபேருக்கு, வியாதி

ஆண்டவன் படைப்பில்
சிறந்ததே,
மனிதன்

அவ்வாரே வாழ்ந்து
காட்டுபவனே
புனிதன்.

அடக்கு அடக்காய்
போய்கள் பல,
சொடுக்கு சொடுக்காய்
கூறுவர்

ஆத்ம திருப்தி
அடைந்தது போல்
அனைவருக்கும் ஓதுவர்.

ஆண்டவனின் அருள் பெற
முயலாதவனை தேடுவர்,

இவர்களின் வலைகளில்
அவர்களாகவே சேருவர்.

மூட நம்பிக்கையில்
மூழ்காமல்
நாம் வாழ்வோம்

பிறந்ததின் பயனாய்
நமக்கும், நம் நாட்டுக்கு
பெருமைகள் சேர்ப்போம்.

கவிதைக் காதலன்
ஃபர்தாஸ்

எழுதியவர் : ஃபர்தாஸ் (29-Mar-16, 7:56 pm)
சேர்த்தது : ஃபர்தாஸ்
பார்வை : 242

மேலே