பேய்ப் பாட்டு இரவு மின்வெட்டு சமயத்தில் த்ரிலுக்காக

........................................................................................................................................................................................

நீ வரும்வரை வரும்வரை வரும்வரை... நா...நனன நனன.. நனனாஆஆ...
நான் விழுவதில்லை ................................. நா ...நனன னானா
நீ தரும்வரை தரும்வரை தரும்வரை .... நா...நனன நனன.. நனனா
நான் விடுவதில்லை................ நா ...நனன னானா

என் வானிலே ..........................நா நானனா
உதிரும் தாரகை ஓ...ரமே ............நனன நான நான நானனா
பொன் மாடமே " " "
புதைந்து போனதே பாவமே......

மூச்சை நிறுத்தும் போது உண்மை நான நனன்ன நான நான
மூர்க்கமானதே....(நீ வரும்வரை..) நான நான னா


காதல் பேரில் கயமையாடும் தாண்டவம்
கன்னி வாழ்வைக் களங்கமாக்கும் ஆணவம்
கண்ணை விற்றுக் கனவு வாங்கும் பேதை நெஞ்சமே....
காற்றில் கடுகி மூச்சில் புகுந்து தீர்க்கும் வஞ்சமே..... ....(நீ வரும்வரை..)

தீண்டிச் சென்ற கைகள் தந்த சோதனை
தேய்ந்த நிலா சாட்சியாகும் வேதனை
கால்நடக்கும் நிழலில் எந்தன் உருவம் வீழுதே..
கல்லறைக்கு உள்ளிருந்து கைகள் நீளுதே..... (நீ வரும்வரை..)


*சரணங்கள் மரணமென்னும் தூது வந்தது- வசந்த மாளிகை பாடல் சரணங்களோடு ஏறத்தாழ ஒத்துப் போகும்..)

எழுதியவர் : அருணை ஜெயசீலி (30-Mar-16, 11:40 am)
பார்வை : 87

மேலே