காதல் கடிதங்கள்
வார்த்தைகளை கடந்த
உணர்வுகளின் வரிகள்
நவரசமும் கலந்த
உணர்சிகளின் சங்கமம்
முகவரிகள் அற்ற
முகவரியை தேடிய பயணம்
ஏக்கத்தின் பிம்பம்
இதயத்தின் நிழல்
ஒவ்வொரு எழுத்திலும் கலந்திருக்கும்
ஆவல்
வரிகளின் இடையில்
தென்படும்
அவளின் & அவனின் முகம்
விரல்களை தாண்டி
விரல் நுனி வழியே
இதயம் எழுதும்
உயிரின் வரிகள்
பல நினைவுகள்
பல கனவுகள்
பல ஏக்கங்கள்
என ஒவொரு வரிகளிலும்
உயிரோட்டம் உலவும்
காதல் கடிதங்கள்
குறுஞ்செய்தி ,
முகநூல் ,
மின்னஞ்சல்,
இன்னும் எத்தனையோ
வழிகளில் காதல் பரிமாறி கொள்ளப்பட்டாலும்
என்றோ எழுதி
இன்றுவரை கொடுக்கபடாமல்
பொக்கிஷமாய் கிடக்கும்
அந்த காகிதங்கள் மட்டுமே
சாட்சியாய் விளங்குகிறது
காதல் கடிதங்களின் புதைந்திருக்கும்
அவனின் & அவளின் நினைவுகளுக்கு