பெண்ணாய் இன்று

இன்றைய
அசாதாரண மாற்றத்தின்
சாதாரண
சலனமற்ற
சபையறிந்த சான்றாய் செய்வித்த
செயலுரு சிலையானால்
பெண் ....

பெண்ணியத்தின் பெயர்ச்சியின்
பிரதிப்பலிப்பின் பட்டியல் சில ..

போரடித்த பெண்ணோ இன்று
போர்முனை போராளியானாள் ..
மாரடித்த நிலையெல்லாம் மாறி
மார்புடைத்த மண்ணின்
மாண்புரைத்தாள் ..

கட்டியவன் கல்லே ஆனாலும்
ததும்பிய கண்ணீரில் காலம் கடத்தியது போய்
காப்பவனே கணவன்
தன்னை ஏற்ப்பவனே தன்னவன்
என்னும் எண்ணமுரைத்தாள் ..

தந்தை, தமயன், தன்னவனென்ற
ஆணின் பிம்பங்களை தவிர
'தோழன்' எனும்
அவனின் ஆழ்மறை பிறப்பறிந்தாள் ..

மடந்தையாய் மகப்பேறு பெற்ற
பேதைமையொளிந்து
அரிவையும், தெரிவையுமே
தெளிந்த அகவையென
அகமுணர்த்தினால்
அகிலத்திற்கு ..

வெறுமையும், வேதனையுமே
உள்ளதென உரைப்பித்த
உலகை கடத்தி
வெற்றியும், வேகமுமே
தனதென ஆக்கினாள் ..

கட்டுப்பாடெனும் கல்லறையாய்
கட்டப்பட்ட சுவர்களை எல்லாம்,
உருண்டை உலகை
உருவமற்றதாய் உணர்ப்பித்த
சுழலை,
சூன்யமாக்கி
சுதந்திர காற்றை
சுவாசிக்க சித்தமானாள் ..

பெண்மையை
பெண்ணியத்தை பற்றி
பேதமையால் பிதற்றும்
ஆண் சமுகமே ..
உடை, உடல்
ஆகியவற்றை கடந்து
உள்ளம், உணர்வாலும்
செய்யப்பட்டது தான் பெண்மை ..
உங்களை உயிராய்
உலகிற்களித்த பெண்கள்
உலகையும் உயிர்ப்பிக்க
அறிந்தவர்களே ..

பெண்மை பேதமை அல்ல
பேராற்றல் கொண்ட பேரண்டம் ..
அணைக்கவும் அழிக்கவும் தெரிந்த
அண்டசராசரம் ..
அச்சமும் அன்பும்
உங்கள் வசம் --
இயைந்தவர்களுக்கு என்றும்
நாங்கள் வசம் ... !!!

-- தாரணி தேவி

எழுதியவர் : தாரணி தேவி (30-Mar-16, 4:41 pm)
பார்வை : 232

மேலே