ஆளுக்கொரு காதல் பவனம்

அந்தக் காட்டுநெல்லி மரவேர் தட்டித்தான்
நம் காதல் துளிர்க்க வேண்டுமென்றிருக்கையில்
உன்னைத் தாங்கிய
நம் நன்நிலத்து வரப்பின் மீது
நிமிர்ந்து இருக்கிறது நம் வீடு.
இங்கும் மனதோடு
வரிசையாக
அழகு வாசற் புற்கள் ,
வயல்சூழ்ந்த நம் புகைப்படங்கள் !
ஆனால் வரப்பினில் கிடைத்த
அவ்வாசம் வீசா வண்ணம்
சுற்றம் மிகுந்த நம் சொந்தங்கள்
ஜன்னல் மூடிக் கட்டியிருக்கிறார்கள்
ஆளுக்கொரு காதல் பவனம்...

- முருகன்.சுந்தரபாண்டியன்

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (30-Mar-16, 3:28 pm)
பார்வை : 98

மேலே