மனம் என்னும் இயந்திரம் - அதற்குள்
சிந்தித்தல் என்பது இருளில் துழாவுதல்
புரிந்து கொள்ளல் என்பது வெளிச்சத்தில் பார்த்தல்
சிந்தித்தல் நினைவில் உள்ள விஷயம்
புரிந்து கொள்ளல் மெய்யறிவு
சிந்தித்தல் இருக்குமிடத்தில் புரிந்து கொள்ளல் இருக்காது
உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்பதால் சிந்திக்கின்றீர்கள்
புரிந்து கொண்டதும் சிந்தித்தல் மறைந்து விடுகிறது
தெரியாத ஒன்றைப் பற்றி சிந்தித்து பார்க்க முடியாது
உங்களுக்கு தெரிந்ததை மட்டுமே உங்களால் சிந்தித்து பார்க்க முடியும்
சிந்தனைகள் மூலம் உண்மையாக புதிதாக எதுவும் வெளிப்படாது
சிந்தனையில் கேள்விகள் உள்ளன
ஆனால் பதில்கள் இல்லை
புரிந்து கொள்வதில் கேள்விகளுக்கு இடமே இல்லை
பதில்கள்தான் உண்டு
தியானத்தின் மூலம் ஒருவர் தனது சிந்தனைகளை விலக்கி விட முடியும்
உங்களுள் மறைந்துள்ள புரிந்து கொள்ளும் ஆற்றலை கண்டு பிடியுங்கள்
ஓஷோ