மனிதன் பல காலம் வாழமுடியும்

மரணம் என்பது இயற்கை. அதை மாற்றிக்காண்பதே சித்தர்களின் கற்ப
சாதனை என்பது போல்.., கற்பம் என்னும் மருத்துவ முறைகளினால், காற்றை சரியாக இயக்கும் முறைகளினால் மரணத்தை வெல்ல முடியும்
என்று சித்தர்கள் கூறக் காணலாம்.

மனிதனின் சிரசுக்குளே ஞான விந்தை நடந்துகொண்டிருக்கிறது.
இதனை சித்த மார்க்கத்தில் தெளிவாகவும் சூக்குமமாகவும் விளக்கியுள்ளார்கள்.

நம் தலைக்குள் இரண்டு முக்கிய புனித ஸ்தலங்கள் உண்டு, ஒன்று ஆக்ஞா சக்கரம் {PITUITARY GLAND} மற்றொன்று சகஸ்ரதளம்.

{PENIAL GLAND} பீடம் நெற்றிக்கு நடுவில் இருக்கும் ஸ்தலம். பலர் நெற்றிக்கண்ணும் (THIRD EYE) புருவநடுவையும் (PITUITARY)
ஒன்று என்று தவறாக புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

நெற்றிக்கண் என்பது பீனியல் {PENIAL} சுரப்பி இருக்கும் இடம் இது ஆகாச வடிவில் பீனியல் சுரப்பியோடு இணைந்திருக்கின்றது.

If you look at the brain anatomy the exact location of the Third eye is
just above the PINEAL GLAND and it is animated in the form of AKASH
space, which has a strategic influence on the particular gland. So now the
secret of yoga is to travel to the SAT [truth] CHIT {consciousness}
ANANDA [bliss] zone howஅ..?

இதை சரியான ஞான ஆசான் தொட்டுக்காட்டாமல் இந்த இரகசியம்
புரியாது, புரிந்துக்கொள்ளவும் முடியாது.

இன்று அறிவியல் கூறும் உண்மை என்ன தெரியுமா..? இந்த சுரப்பியை சரியாக இயக்குவதன் மூலம் மனிதன் பல காலம் வாழமுடியும். அதுவும் நிறைந்த ஞானசெல்வத்துடன்.

பீனியல் சுரப்பி என்பது மனித மூளையின் மேல்பகுதியில்
அமைந்துள்ளது. இதன் இயக்கத்தை யோகத்தின் மூலமாகச்
செயல்பட வைப்பதே சித்த முறையாகும்.

பீனியல் சுரப்பு 14 வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர்
அதன் வளர்ச்சிக் குன்றிவிடும். பீனியல் சுரப்பி மூலம் சுரக்கும் ஹார்மோன், ‘மெலடோனின்’ எனப்படும். மெலடோனின்
{MELOTONIN} எனப்படும் ஹார்மோன் மனித ஆயுளை நீட்டிக்கவும் பாதுகாக்கவும் வல்லது என்பார்கள்.

இதை தவிர்த்து செரொடொனின் (SEROTONIN), டொபொமின் (DOPOMINE), ஆக்சிடாசின் (OXTOCIN) மற்றும்
ஓபியத்ஸ் (BRAIN OPIATES) மூளையில் இருக்கும் நுண்மின்னியங்கி
சமிக்ஞை (NEURO TRANSMITTERS) இந்த இரசாயனங்களை சரிவர நாம் இயக்குவதன் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையில் தோன்றும் எல்லாவிதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியும்.!

SEROTONIN – INCREASED SELF-ESTEEM
DOPOMINE – ANTI DEPRESSANT
OXYTOCIN – PLEASURE HORMONES
OPIATES – BODY PAINKILLERS

இதன் சுரப்பை நீட்டிக்க முறையான மூச்சுபயிற்சி, வாசியோகம்,
சிவஇராஜயோகம் பயன்படுகிறது.

இச் சுரப்பு குறைந்தால் ஆயுளும் குறையும். மெலடோனின்
சுரப்பை அதிகரிக்க யோகம், கற்பம் போன்றவை பயன்படுகின்றன.

இதைப் பற்றிய ஞான உண்மைகளை திருக்குறளில்
திருவள்ளுவரும் மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

இந்தக்குறள்களில் மலர்மிசை, மானடி ,அடக்கம் ,வையம் , என்பதும்
பரிபாஷைகளாகும் (secret code word) இன்னும் நிறையவே உண்டு.
இதையே காகபுஜண்ட மகரிஷி வழிமொழிந்து கீழ்வரும் கவியில்
அதன் சூட்சுமத்தை உரைக்கின்றார்.

பாரப்பா பரப்பிரம்ம ஒளியினாலே, பத்தியே நரம்புவழி பாயும் போது,
ஆரப்பா இருக்கண்ணில் ஒளிவதாகி அணடமெல்லாம் ஏகமாய் தெரியலாச்சு,

காரப்பா நரம்பென்ற விழுதுவட்டம் கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு, வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான் வெற்றிப்பெற இன்னுமுந்தான் (உரைக்க்கேளு) நுரைக்கக் கேளே...
பாரடா புருவமத்தி யேதென் றாக்கால்
பரபிரம்ம மானதோர் அண்டவுச்சி
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுமுனையென்று நினைவாய் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுமுனையிலே மனந்தான்
பாய்ந்து கலந்தைந்து (கலந்து ஐந்து பூதமும்)
ஒன்றாய் போமே..!
ஆக இதை சரியாக புரிந்துக்கொள்வதே ஆன்மீகம்.

இதைத்தான் இயேசுபிரான் “தட்டுங்கள்
திறக்கப்படும் தேடுங்கள் தரப்படும்..!”என்கிறார்.

புத்தர் “அப்போ தீபோ பவ..!”

உனக்கு நீயே ஒளியாக இரு என்கிறார்
மாணிக்கவாசகப்பெருமான் “
தேடிக்கொண்டுக்கொண்டேன்
தேடொணாத்தேவனை என்னுள்ளே தேடிக்கண்டுக்கொண்டேன்..!"

ஆத்மவித்தை என்பதும் ப்ரம்மவித்தை என்பதும் சித்த
வித்தை என்பதும் இதுவேயாகும்.!

“ இருக்கும் இடத்தை விட்டு இல்லாத
இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத்தங்கமே...
அவர் ஏதுமறியாரடி ஞானத் தங்கமே..!"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (31-Mar-16, 8:56 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே