3 இணையம் எந்த அளவு மகளிரை மாற்றியுள்ளது, அதனால் மகளிருக்கு மற்றும் அவர்களால் மற்றோர்க்கு உண்டான நன்மை, தீமைகள் என்னென்ன

மகளிர் தினப் போட்டி " யாதுமாகி நின்றாள் "

3) இணையம் எந்த அளவு மகளிரை மாற்றியுள்ளது, அதனால் மகளிருக்கு மற்றும் அவர்களால் மற்றோர்க்கு உண்டான நன்மை, தீமைகள் என்னென்ன?

இணையம் மகளிரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் திருமணமான உடன் பெண்கள் தங்கள் நட்பு வட்டத்தில்
இருந்து தனிமை படுத்தபடுவார்கள். ஆனால் இப்போது பள்ளி, கல்லூரி
தோழிகளுடன் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ் புக் போன்ற சமூக வலை
தளங்கள் ஒன்றாக இணைந்துள்ளனர்.

ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டால் என்னதான் படித்திருந்தாலும்
அவள் இல்லத்தரசி தான். சுதந்திரமாக செயல் படுவதிலும் தடை தான்.
இதனை ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொண்ட பெண் சமுதாயம் இப்போது
மெல்ல மெல்ல தன் சுய முன்னேற்றத்தையும்,சுய கௌரவத்தையும் உயர்த்த
முனைந்துள்ளது. இதில் இணையம் தான்.

நன்மைகள்:

1) நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்கள் அறிவை
மேம்படுத்திக்கொல்கின்றனர்.

2) தங்கள் குழந்தைகள் பயிலும் வகுப்பு ஆசிரியருடனும் இதர மாணவர்களின்
பெற்றோர்களுடன் வாட்ஸ் ஆப் போன்ற குருப்புகளில் ஒன்றாக இருப்பதால்
எளிதில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

3)திருமணத்திற்கு பிறகு மேற்படிப்பை தொடர நினைக்கும் பெண்களுக்கு
இணையம் என்பது ஒரு வரப்ரசாதம்,

4) வீட்டிலிருந்த படியே டுஷன், யோகா, பரதம், ஓவியம் ,சமையல் போன்ற
வகுப்பு களை ஸ்கைப் மற்றும் யூ டியூப் போன்றவற்றில் எடுத்து வருவாய்
ஈட்டுகின்றனர்.

5) குழந்தை வளர்ப்பு,மனோ தத்துவம், போன்ற புத்தகம்களை எளிதில் படித்து
வாழ்வை ஆரோக்கியமாகவும்,இனிமையாகவும் வைத்துள்ளனர்.

6)கைவினைப் பொருட்கள் செய்வது, ;அழகு கலை பயிச்சி போன்றவற்றை
ஸ்கைப் மற்றும் யூ டியூப் மூலம் எளிதில் கற்றுக்கொண்டு சுயதொழில் செய்து
முன்னேற உதவுகிறது.

தீமைகள்:

1) சமூக வலைதளங்களில் முகம் அறியாத நட்பினால் பெண்கள் பல
பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

2)பயனுள்ள வகையில் கழிக்க வேண்டிய பொழுதுகள் மணிக்கணக்கில்
வீணடிக்கப் படுகிறது.

3) பெண்கள் தங்கள் புகைப்படங்களை அதிகம் பதிவேற்றம் செய்யும் போது
அதனை இணையதளத்தில் பலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

4)அதிக நேரம் இணையத்தை பயன்படுத்துவதால் கண், மூளை போன்ற
உறுப்புகள் பாதிக்கப் பட்டு உடல் நலனிற்கு கேடு ஏற்படும்.

5) இணையத்தில் மூழ்கி கிடப்பதால் சில பெண்கள் தங்கள் குழந்தைகளை
முறையாக கவனித்துக்கொள்வதில்லை. குழந்தைகள் தொந்தரவு
செய்யாமல் இருக்க அவர்கள் கையிலும் ஒரு i pad வங்கி கொடுத்து
வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி கொள்கின்றனர்.

6) சில பொய் தகவல்களும், மார்பிங் படங்களும் பல பெண்களின் வாழ்வை
சீரழித்துள்ளது .

இணையம் என்பதை முறையாக ஆக்க
வழியில் பின்பற்றும் வரை மட்டுமே.அதன் பயன்களையும்,
நன்மைகளை யும் அடைய முடியும். இல்லையேல் அது
நம்மையே அழித்து விடும்.

=பிரேமா கார்த்திகேயன்,கொளத்தூர்.

எழுதியவர் : பிரேமா karththikeyan (31-Mar-16, 12:49 am)
சேர்த்தது : prema karthikeyan
பார்வை : 303

சிறந்த கட்டுரைகள்

மேலே