எங்கே இறைவன்

எங்கே இறைவன். ..!
====================
பகுதி -1
========

நன்பர்களே...எனக்குள் வெகு நாட்களாக ஒரு சந்தேகம். ..என்ன தான் பேய் இல்லை என்றாலும் விஞ்ஞான அறிவினால் அதை நிருபித்தாலும்..நிருபிக்காவிட்டாலும்..பெரும்பாலானோர் மணம் அதை ஏர்க்க மருக்கிறது.

ஆனால் இதனையே தெய்வ சக்தி என்றால் நம் கல்வி அறிவு அதை ஆராய்ச்சி செய்ய முனைகிறது. ஏன். ?

எங்கே இறைவன். ..!

இந்த கேள்விக்கு இங்கே யாரிடம் விடை உள்ளது.
ஓர் இந்துவை கேட்டால் கோவிலை காட்டுவார். .
ஓர் முகமதியரை கேட்டால் மசூதியை காட்டுவார். .
ஓர் கிறிஸ்துவரை கேட்டால் சர்ச்சை காட்டுவார். ...
ஆனால். ...
இங்கே எல்லாம் இறைவன் இருக்கிறாரா....?

எதர்க்காக கோவில்கள். ..?

முதலில் இந்த கேள்விக்கு பதில் தேடுவதர்க்கு முன். ..

"இறைவன் தான் மனிதனை படைத்தாரா இல்லை மனிதன் அந்த கடவுளை படைத்தானா. ...? "

என்ற கேள்வி இங்கே எழுப்ப படுகிறது. ..

இதை ஓர் குதர்க்கமான வாதமாக எடுத்துக்கொண்டால் ..

"கோழியில் இருந்து முட்டை வந்ததா...இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா..? "

என்பது போல் ஆகிவிடும்.

(ஆனால் முதலில் முட்டையில் இருந்து தான் கோழி வந்தது...என்பதே உண்மை. .இதை அறிவியல் பூர்வமாக நுருபித்துவிட்டார்கள்...ஆதாரம் -discovery science வலைதளம் )

ஆனால் கடவுளை பற்றி விவாதத்தை இவ்வாறு பேசுவது உசிதம் ஆகாது.

நான் அறிந்த வரையில். ..ஆதி மனிதன். .எல்லா இயற்கை சக்திகளுக்கும் பயந்துதான். .பணிந்தான்....வழிபாடு செய்தான்...அவனுக்கு என்ற எல்லை கோட்டை வகுத்து வாழ்ந்தான்.

எனவே மனிதன் தான் கடவுளை படைத்தான் என்ற முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது.

ஆனால் அந்த முதல் மனிதனை பரிணாமவளர்ச்சி அடையச்செய்து மனிதனாக மாற்றியது இயற்கை தானே....

எனவே "இயற்கையை "கடவுளாக கொண்டால். ...

"கடவுளே மனிதனை படைத்தார் "
என்ற முடிவுக்கு தான் முதலில் வரவேண்டும். .

ஆனால் காலம் செய்த விணை அந்த முடிவை அவ்வளவு எளிதாக நம்மை எடுக்க விடுவதில்லை. ...!


மனிதனாகிய நாம் அனைவரும் ஏதாவது ஓர் கட்டத்தில் கட்டாயம் உணர்வோம் தனக்கு மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது. .
அது.., ஆத்திகர் ஆனாலும் சரி நாத்திகர் ஆனாலும் சரி. ..நியதி ஒன்று தான்.
என்ன ...
ஆத்திகர் தனக்கு மிஞ்சிய சக்தியை கோயில்களில் தேடுவர்...
நாத்திகர் தனக்கு மிஞ்சிய சக்தியை மிஞ்சிய சக்தியை கோயில்களைப் விட்டு வெளியே தேடுவர். ...

"எங்கும் நீக்கமற நிறைந்தவன் இறைவன் "
"இறைவன் தூனிலும் இருப்பார். .
துரும்பிலும் இருப்பார் "
என்கிறது இந்து மத நம்பிக்கைகள்.

(இந்து மதம் பற்றிய பெயர் காரணமும். ..தோற்றமும் கூட விவாதத்திற்க்குரியது பிறகு பேசுவோம் )

இப்படி பட்ட நம்பிக்கைகளை வைத்து பார்க்கும் போது ...எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது...ஐம்பூதங்களான இயற்கையே. ..

இயற்கையே கடவுளாக இருக்கும்போது எதர்க்காக கோவில்கள். ..?
நம்மை சுற்றிலும் இயற்கை தானே. ..!

ஆனால் இதர்கான காரணம் கண்டிப்பாக இருக்கும். நம் முன்னோர்கள் . , மூடர்கள் அல்ல.

ஞானத்தால் மட்டுமே சூரியகுடும்பத்தினை பற்றிய தெளிவு அசாத்தியமானது.இது போல் ஓராயிரம் இருக்கிறது அவர்களின் அறிவுக்கு சான்றாக. ...

ஆனால் என்ன காரணம் கோவில்களை உருவாக்க. ..?


கோவில்கள்...!
============
நம் கோவில்கள் இருக்கும் இடத்தை பொதுவாக கணக்கில் கொண்டால். ..,
1-மலைமேல் இருக்கும். ,
2-ஆற்றங்கரையில் இருக்கும். ,
3-தோப்பு., காடு., (குலசாமி)

இவ்வாறாக நம் கோவில்கள் இருக்கும் இடத்தை வகை படுத்தலாம்.

1-மலைமேல் கோவில். ..!
======================
எனக்கு முதல் கேள்வியே ஏன் மலை மேல் கோவில்கள் உருவாக்கப்பட்டன..?

ஏன் வேறு இடம் இல்லையா. .?

என்ற எகத்தால கேள்விகளும் நம்மிடையே எலகூடும்.

ஆனால் இதர்கான விடைகளும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ளனர்.

மலைகளும் இயற்கை தானே. ..
எனவே தான் இயற்கையே கடவுளாக கொண்ட நம் முன்னோர்கள் அந்த இயற்கையில் பெரும் பங்கு வகித்த மலை மேல் (கடலுக்கு அடுத்து ) கோவில்களை கட்டினர்.

ஆனால் இதர்க்கு வேறு ஓர் முக்கியமான காரணம் உள்ளது.

மலைமேல் மட்டுமே விளையும் மூலிகையும்..அதிகாலையில் அந்த மூலிகை காற்றும் நமக்கு நன்மை தரும்.
அந்த கரடுமுரடான பாதையில் மலைமேல் ஏறுவதால் நம் கால் பாதங்களில் உள்ள எல்லா நரம்புகளும் ஊக்குவிக்கபடுகிறது. அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக நாம் இருக்க முடியும்.
காலையும். , மாலையும் மலைமேல் ஏறுவதும்., இறங்குவதும்..உடற்பயிற்சியே...!
முக்கியமாக மண அமைதி கிடைக்கும். அந்த காலத்தில் BP கு மருந்து இல்லை.
இத்தகைய நல்ல விஷயங்களை ஒரு சின்ன கோவிலுக்கு செல்லும் செயலில் மறைத்து வைத்து உள்ளனர் நம் முன்னோர்கள்.

ஆனால் இந்த மலைமேல் உள்ள தெய்வம் பற்றி நாம் இன்னும் பேச வேண்டும்.


மலை-தெய்வம்...!
===============

பரவலாக நம் நாட்டிலுள்ள எல்லா மலைகோயில்களிளும் மூலஸ்தான கடவுளாக முருகப்பெருமான் இருப்பதை நாம் பார்க்கலாம். .ஒரு சில மலைகோயிலை தவிர.

அப்படி என்ன முருகனுக்கு மட்டும் மலைமேல் முக்கியத்துவம். ...
என்ற ஒரு வினா இங்கே எழுப்பபடுகிறது...

ஆனால் இதர்கான விடைகளை அறிய நாம் "தொல்காப்பியரை " தான் நாட வேண்டும்.
தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தில் 5 வகை நிலத்தையும்..அவற்றின் தன்மையையும். ..அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை சூழலையும் அவர்களின் நெறியையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

அவற்றில் முதலில் வருவது "குறிஞ்சி " நிலப்பகுதி.
அதாவது" மலையும் மலையை சார்ந்த இடமும்"....

இங்கே வாழும் மக்கள். , மலைமேல் கிடைக்கும் தேன். .கிழங்கு. .மற்றும் வேட்டையாடி கிடைக்கும் உணவை உண்டு. .ஒரு கூட்டமாக வாழ்ந்தனர். இவர்களே வேட்டுவ இன மக்கள்.

இவர்கள் கடவுளாக பாவித்துக் வணங்கியது.."கொற்றவை" எனும் பெண்.

சரி. ...இதர்கும் முருகனுக்கும்என்ன சம்பந்தம். ..?

பின் நாளில் அதாவது தொல்காப்பியர் காலத்திர்க்கு பின் இயற்றப்பட்ட "திருமுருகாற்றுபடையில்" முருகனை "கொற்றவையின் மகன் " என்று குறிப்பிடபட்டுள்ளது.

கொற்றவை ஆகட்டும் முருகப்பெருமான் ஆகட்டும்.. (இருவருமே மனிதர்கள்.. அதுவும் தமிழர்கள்)..மலைவாழ் மக்களுக்கு என்னற்ற நன்மைகளையும். , தியாகங்களையும் புரிந்து அவர்கள் மனதில் கடவுளாக நிலைத்து விட்டனர்

தொல்காப்பியர் காலத்தோடு. .கொண்றவையின் உருவம் மறைந்து. .திருமுருகாற்றுபடை மூலம் அவர் பெயர் மற்றும் நிலைத்தது.

எனவே முருகப்பெருமானும் கடவுள் அல்ல. அவரும் "ஆதித்தமிழன்" தான்.

வெறும். , தொல்காப்பியம் மற்றும் திருமுகாற்றுபடையில் உள்ள வேற்றுமையை வைத்து இந்த முடிவுக்கு வர முடியுமா. .?

எனும் கேள்வி என்னுள்ளும் எழுகிறது.

ஆனால் நால் வகை வேதத்தில் ஒரு வேதத்தில் கூட முருகப்பெருமான் பற்றிய தகவல் இல்லையே. .!

இதை வைத்து நாம் முருகப்பெருமான் ஒரு மனிதர் எனும் முடிவுக்கு வரலாம்.

வேதத்தில் விநாயகர் பற்றியும் இல்லை. ..கடவுளின் குடும்பம் பற்றிய விபரமும் இல்லை. ..பின் எப்படி. ..கடவுளின் குடும்ப கலாசாரம் இங்கே நிலைத்தது.

இதனைப் பற்றிய விவாதத்தை நாம் பகுதி -2-ல் காணலாம்.

பகுதி -1 ....முற்றும்.

எழுதியவர் : mohansiva (30-Mar-16, 11:53 pm)
சேர்த்தது : மோகன் சிவா
Tanglish : engae iraivan
பார்வை : 164

மேலே