காதலின் தயக்கம்

அன்பே.., -உன்
விழி எனும் வில்லினால்....,
பார்வை எனும் அம்பினால் -என்னை
நீ வேட்டையாடிவிட்டாய்....!

ஆழிக்கடலின்ஆழத்தில்
உள்ள முத்தினைப்போல்-என்
ஆழ்ந்த மனதில் உந்தன் நினைவுகளை விதைத்துவிட்டாய்...

நானும் உன் மனதினுள்
மறைந்துவிட்டேனடி....!

காலைக்கதிரவனோ சோம்பல்
முறிக்க. .,
அந்த அந்தி வேளையில்
அம்புலியும் தென்றலில் பாடினான்...
காலமோ மெல்ல நகர்ந்தது. ....
மௌனத்தின் பிடியில். ...!


ஒரு நாள். ...,

மழைச்சாரல் என்னை முத்தமிட ..,
வானவில்லோ எனக்கு வழி காட்ட..,
தென்றலோ என்னை தேடிவர..,
நானோ அவளை தேடிச்சென்றேன்...,
அந்த ஆலமரத்தடியின் கீழே...!

காட்டுக்குயில் கூவும் போது -நானோ..,
காதல் மலரை கொண்டுச் சென்றேன்., அவளுக்காக.-என்
காதல் மனதை சொல்ல வந்தேன் -அவள் ., காதோரமாக..! -என்
காதல் மொழிகளை பேச வந்தேன். ...
ஆனால். ., அங்கு. ,
"தயக்கம் "தடையாய் வந்ததேனோ...?

அங்கே ..,
நான்கு விழிகள் சந்தித்ததா-இல்லை
நான்கு கோடி மின்னல்கள் சங்கமித்ததா....?
தெரியவில்லையே.....!

அன்பே. .,
உன் விழியில் நான் கண்ட எனது காதல். ....,
உன் உதட்டின் வழியே ஓசையாய்
வருவது எப்போது. ..?

எழுதியவர் : மோகன் சிவா (1-Apr-16, 1:57 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 888

மேலே