பேருந்து நிலையமும் பிச்சைக்கார கிழவியும்

மதுரை பெரியார் பேருந்து
நிலையம்.....

பேருந்துகள் குறுக்கும் நெறுக்குமாக ஒடிக்
கொண்டிருந்தன.....
பேருந்தை பிடிக்க விரையும்
மனிதர்கள்...
கூச்சல்கள்,, வாகனங்களின்
அலறல்கள்....

இது மாட்டுதாவணி போகுதா..?

இது புதூர் போவுதா..?

படிக்கத் தெரியாத பெருசுக்களின் தனக்கான
பேருந்தை பிடித்துவிட வேண்டும்
என்ற கவலைகள்...
எதிர்காலத் தூண்கள்
பக்கத்தில் தனக்கான எதிர்கால
மனைவி....??????
தேடி சைட் அடித்துக் கொண்டிருக்க,,,
தமது எதிர்கால கணவன்????
தன்னிடம் பேசத் துடிக்கும்
தவிப்புகளை ஓரக் கண்ணால்
ரசித்துக் கொண்டிருந்தார்கள்...

ஐஞ்சு ரூபா.. ஐஞ்சு ரூபா....
என்று வெள்ளரி கொய்யாக்ளை
விற்று விடும் முனைப்புடன்
பேருந்தில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள் வியாபாரிகள்.....

ஒரு ஓரத்தில் டீக்கடை வாசலில்
அன்றைய தலைப்புச் செய்தியை
மேய்ந்து கொண்டிருந்தேன்....
எனக்கான பேருந்து இன்னும்
வரவில்லை...

பின்னால் யப்பா,,,
சாப்புட்டு ரெண்டு நாள்
ஆகுது காசு கொடுப்பா ஒரு
மூதாட்டி கொச்சையான
உடையில் நின்று கொண்டிருந்தார்...
தோளில் ஒரு ஜோல்னா பை...
உள்ளே ஏதேதோ திணித்து
வைக்கப்பட்டிருந்தது...

பையில் கிடந்த ஒரு ரூபாயை
எடுத்து நீட்டினேன்...
வாங்கிக் கொண்டு நகர்ந்தார்...

என்னிடம் கேட்டது போலவே
அவர்களிடம்,,

யப்பா.....

பலர் இல்லை என்க
சிலர் சில்லரைக் கொடுக்க
நகர்ந்து போய்க் கொண்டிருந்தாள்.....

தடால் சத்தம்....

என்ன ஏது என்று
திரும்பினால்,,

யாரோ ஒரு இளைஞன்
விழுந்து கிடந்தான்...

சுற்றி இருப்பவர்கள் வேடிக்கைப் பார்த்தபடி
கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்...

விழுந்து கிடந்தவனை
தாண்டிக் கொண்டு வந்த
நபர்,,,

வரும் போதோ இவன கவனிச்சேன்
தள்ளாடிட்டே வந்தான்...
குடிகாரப் பய,,,
காலங்காத்தாலே தண்ணிய
போட்டு வந்துட்டான்...
தூ,,,

ஆமா சார்,,,
நாடு எங்க போவுது,,
இந்த வயசுலையே இப்படி,,

விழுந்து கிடந்தவனின்
அருகில் கூட யாரும்
செல்லவில்லை.. '

அந்த நிலையில்
என்னிடம் பிச்சை வாங்கிப்
போன மூதாட்டி
விழுந்து கிடந்தவனை கண்டு

யாரு பெத்த புள்ளையோ
இப்படி விழுந்து
கிடக்கு...
என்று அவனை நோக்கி
நகர்ந்தாள்....

தம்பி யப்பா...
என்று அவனை அசைத்தாள்..

ம்ம்மா..... தண்ணி
தண்ணி.....

தன் கோல்னா பையில்
நெழிந்த வாட்டர் கேனில்
இருந்த தண்ணியை புகட்டினாள்...

பெருந் தாகம் வந்தவனைப்
போல்...
அத்தனை தண்ணிரையும்
ஒரோ மடக்கில்
குடித்து முடித்தான்....

யப்பா என்னப்பா ஆச்சு
திடீர்னு மயங்கி விழுந்துட்ட..??

காலைல சாப்பிடல பாட்டி
அதான் மயங்கிட்டேன்...
ரொம்ப தாங்க்ஸ் பாட்டி

அதெல்லாம் வேண்டாம்யா
எம் பேரன் வயசுதா உனக்கு
என் கிட்ட கொஞ்சம் சோறு
இருக்கு சாப்புடுதீயா..

இல்ல பாட்டி பரவாயில்ல....

இதற்குள் அவன்
மயங்கிக் கிடந்த போது
கூடாத கும்பல் இப்போது
கூடியது...

என்னிடம் அந்த இஞைனை
குடிகாரப் பயல்
என்று திட்டியவரும்
வேடிக்கை பார்க்க
சென்றார்....

எனக்கான பேருந்து வந்தது
ஏறி அமர்ந்ததும்
எனக்குள் எழுந்த
கேள்வி.....

எது மனித நேயத்தை மறக்கடித்தது...?


- அருள்.ஜெ

எழுதியவர் : அருள்.ஜெ (2-Apr-16, 11:50 am)
பார்வை : 280

மேலே