ஒழுங்கா இருக்கணும்னா அந்த பசி இருக்கனும்

கேம்புக்கு பின்னால் சுற்றித்திரிந்த பூனைக்கு
ஒவ்வொரு இரவும் கேண்டீனில் எனக்கு கிடைத்த சிக்கன்,மட்டன்.மீன் துண்டுகளை ஒரு பேப்பரில் மடித்து கொண்டு வந்து பூனைக்கு போட்டு வந்தேன் .
பச்சை நிற கண்கள் மிளிர.பளபளப்பு கூடி,
கொளுத்து வளர்ந்தது அது.
ஓரிரவில் எனக்கு கிடைத்தது ரெண்டு அவித்த முட்டைகள் தான்.
அக்கறையோடு அதை கொண்டுவந்து போட்டால்..
திமிரெடுத்த பூனை அதை தின்னாமல்,மோந்து பார்த்து விட்டு திரும்பி படுத்துவிட்டது.
எனக்கு வந்த கோபத்துக்கு .நாளைந்து நாட்களுக்கு அந்த பக்கமே போகவில்லை .
ஆறாம் நாள் எட்டிப்பார்த்தேன்.
சுணங்கி கிடந்தது .பாவமாக இருந்தது.
ரெண்டு ரொட்டி துண்டுகளை பிச்சிப்போட்டேன்.
அரை நிமிடத்தில். லபக் லபக்கென்று தின்று தீர்த்த பூனை.
"நன்றி..நன்றி" என்பது போல் என் காலை சுற்றியது.
"ம்..அந்த பசி இருக்கனும்.." என்றவாறு நகர்ந்தேன் அங்கிருந்து .

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (2-Apr-16, 1:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 207

மேலே