நியாயமா தர்மமா
"நர்மதா...! இங்க வந்துட்டுப் போ.." அம்மா குரல் கேட்டு , தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்து விட்டுச சென்றாள்...
"இந்தா..! காபி எடுத்துக்கோ... ! சூடு ஆறிடும்.... அப்புறம் படிக்கலாம்..சொல்லி முடிப்பதற்குள்
" ஏன்? எனக்கும் ஒரு டம்ளர் காபி கொடுக்கலாமே...? பொண்ணுக்கு மட்டும்தானா? " கிண்டலாய் கேட்டார் நர்மதாவின் அப்பா....
" எல்லாம் உங்களுக்கும் கொடுக்கிறேன்.." என்று அழுத்தமாய் சொன்னாள் அம்மா..
நர்மதாவிற்கு நினைவு தெரிந்த நாள் முதலே தான் ஒரு சிறந்த நீதி தவறாத தர்மத்திற்கு போரிடும் வக்கீலாய் திகழ வேண்டும் என்பது லட்சியம்... நாட்கள் செல்ல செல்ல அவளின் லட்சியத்தில் உறுதியாய் இருந்தாள்.. எம். ஏ. முடித்து
பி. எல். செய்தாள்... இதோ , எம். எல் படித்துக் கொண்டிருக்கிறாள்... ஒரு பெரிய வக்கீலிடம் உதவியாளராய் சேர்ந்திருக்கிறாள் ....
அம்மாவிற்கு இவள் செய்வதில் ஒன்றும் உடன்பாடில்லை...
" என்ன நியாயம், தர்மம்? 10 பேர் இருக்கிற இடத்திலே 8 பேர் மனசாட்சியை கீழே வெச்சுட்டுதான் இந்த தொழிலை பார்கிறா... நீ அந்த இடத்தில் நின்று போராடி எந்த நியாயத்தை நிலை நாட்டப்போறே? பேசாம கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணி வேலைக்குச் சேரு... " என்று அடிக்கடி விவாதிப்பதுண்டு...
ஆனால், நர்மதா நிதானமாக,, " அம்மா.. நீ ஏன்மா உன் மனசை போட்டு அலட்டிக்கறே? எல்லாருமே இந்த வக்கீல் தொழில் மோசம், சரி இல்லை... யாருமே மனசாட்சிக்கு பயப்படறது இல்லை என்று நினைச்சு ஒதுங்கறது எந்த விதத்தில் பொருந்தும்? வாழ்க்கையிலே போராடி ஜெயிக்கறது தானேமா இன்பம்...! நீ அமைதியா இரு... " என்பாள்...
" என்னமோ பண்ணிட்டுப் போ... உங்க அப்பா கொடுக்கிற செல்லம்.." சற்று சலித்துக் கொண்டு பதில் சொல்வாள்..
நர்மதா.... தன இலக்கில் உறுதியாய் இருந்தாள்....
தன மேல் அதிகாரியான சிறந்த வக்கீல் மிகவும் திறமையானவர் என்பதில் எந்த தயக்கமும் இல்லை.... ஆனால், அவர் வாதாடுவதெல்லாம் நியாயத்திற்கா என்றால் இவளிடம் பதில் இல்லை...
ஒரு நாள் வழக்கிற்காக இவளும் அவருடன் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தாள்...
வழக்கு...
ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்த பதவியில் சரவணன்...
தன உழைப்பை பகல் , இரவு பாராமல் அந்த நிறுவனத்திற்காக உண்மையாக சமர்பித்தான் . பொறாமையின் காரணமாக இவன் மேல் வீண் பழி சுமற்றிய சக ஊழியன் பேச்சு ஈடுபட்டது.... இவன் 15 லட்சங்கள் சூறையாடியதாய் இவன் மீதி வழக்கு.... நர்மதாவின் தலைமை வக்கீல் அந்த நிறுவனத்திற்காக ஆஜார் ஆகி இருந்தார்... விளைவு... இதோ கையில் விளங்கோடு சரவணன்.....
அவன் அம்மா இவனை வெறுக்கும் பார்வையுமாய் , கண்ணில் கண்ணீருடன்....
நர்மதாவால் என்ன செய்ய முடியும்....? ஒரு வார்த்தை உயர் அதிகாரியை எதிர்த்து பேச முடியுமா? தயங்கினாள்... எதிர்த்தால் தன உதவியாளர் பதவி பறிபோகும்.... விளைவு.. தன கனவு முடங்கிவிடும்....
அன்று இரவு அவள் மனசாட்சி...இவளைப் பார்த்து
"என்ன நர்மதா? ஏன் சும்மா இருக்கே? உன் தலைமை வக்கீல் வாதாடிய வழக்கு நியாயமா? அதற்கு நீ கட்டுப் படறியா? " என்று கேட்டது.....
" நான் என்ன செய்ய முடியும்... என் தகுதிக்கு அவரை எதிர்த்து போராடுவது என்பது இயலாத காரியம்... "
" அப்படித்தானே மற்றவர்களும்... ஒரு சூழ்நிலை கைதிகளாய் இருக்கின்றனர்.... மற்றவரை பழிக்கும் முன் நாம் அந்த நிலையில் இருந்தால் என்ன செய்வோம் என்பதை யோசி...." ஆனால், நீ ஏன் தயங்கறே? உன் அம்மா பல முறை உன்னிடம் இதை கூறி உள்ளாள்... அப்பொழுதெல்லாம் உறுதியாய் இருந்த நீ ஏன் இன்று மௌனமாய் இருக்கிறாய்?" மறுபடியும் மனசாட்சி கேட்டது...
" உண்மை... ! பேசுவது சுலபம்... செயல் படுத்துவது முற்றிலும் கடினமான ஒன்று என்பதை இன்று உணருகிறேன்... அதற்காக என் லட்சியத்தை நான் விட்டுக் கொடுக்க முடியாது... இதோ யோசிக்கிறேன்.... என்ன செய்யலாம்... கொஞ்சம் அவகாசம் தேவை...!" இது நர்மதாவின் பதில் மனசாட்சிக்கு...
இரண்டு நாட்கள் உடம்பு சரி இல்லை என்று அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் விடுப்பு சொல்லிவிட்டாள்...
தன அறையிலேயே அடைப் பட்டு கிடைக்காமல் அம்மாவிடம் நிறைய பேசினாள்... அரசியல், சினிமா அப்படி இப்படி என்று... அம்மாவிற்கும் சந்தோஷமாக இருந்தது....
இரவில் நன்கு யோசித்தாள்... " நம் லட்சியத்தில் உறுதியாய் இருப்பது ஒன்று அதை எப்படி நிலை நாட்டுவது என்பது ஒன்று... எனக்கு புரிந்தது... நான் இப்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து என் லட்சியத்தை நிலை நாட்டுவது என்பது இயலாத காரியம்.... நாளை அப்பாவிடமும் கொஞ்சம் ஆலோசனை கேட்போம்... பிறகு ஒரு நல்ல முடிவிற்கு வருவோம்.." மனதில் உறுதி கொண்டு கொஞ்சம் கண் அயர்ந்தாள்...
மறு நாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அப்பாவிடம் தன தொழில் லட்சியத்தை விவரித்தாள்... நிறைய கலந்துரையாடல்கள்..
" அப்பா..! இந்த ஒரு வழக்கிலேயே அநியாயத்தை உணருகிறேன்... அப்படி இருக்க என்னால் எப்படி அங்கு வேலை செய்ய முடியும்... ? அது மட்டும் இல்லை... அந்த சரவணனுக்கு கட்டாயம் விடுதலை வாங்கித் தரனும்... உங்கள் கருத்து என்ன? "
நர்மதா கேட்டதற்கு உடனடியாக அப்பாவால் பதில் கூற முடியவில்லை.... சற்று நேரம் மௌனம்...
இரண்டு மணிநேரம் கழித்து நர்மதாவை கூப்பிட்டார் அப்பா..
" நர்மதா... நீ நல்ல படிச்சவ.... புத்திசாலியும் கூட... நீ நியாத்திற்காக வாதாடுவதில் எந்த தவறும் இல்லை... மன திருப்தி இல்லாமல் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லைதான்.... என்னை பொறுத்த வரையில் நீ அந்த உதவியாளர் வேலையை விட்டுடு.... மேலே படி.... வேறு நல்ல வக்கீலாகப் பார்த்து ஜூனியராக சேறு..... இந்த வழக்கில் வாதாடி சரவணனுக்கு விடுதலை வாங்கிக்கொடு.... ஒரு இரண்டு வருடங்கள் போரிடு.. பின்பு நீ தனியாக வழக்குகளை எதிர் கொள்ளலாம்.... உன் கொள்கையை எக்காரணத்திற்கும் கைவிட்டுடாதே... எந்தப் பக்கம் பார்த்தாலும் ஊழல், கொலை, கொள்ளை, ஏமாற்றம்தான்... கண் மூடி செல்வது என்பது கோழைத்தனம்.... " அப்பா கூறியது நர்மதாவிற்கு பெரும் பலத்தை கொடுத்தது.... அவள் மனமும் லேசானதை அவளே சற்று உணர்ந்தாள்...
இவர்கள் பேசியதில் அம்மாவிற்கு ஒன்றும் அவ்வளவு திருப்தி இல்லை என்றாலும் அவள் வாயை திறக்கவில்லை.....
மறுநாள் தன ராஜினாமாவை கொடுக்க மேலதிகாரியை பார்க்க சென்றாள்...
ஓரிரு மாதங்களில் வேறொரு வக்கீலிடம் சேர்ந்தாள்.... சரவணனுக்காக வாதாடி வெற்றியும் கண்டாள்......
இரண்டு ஆண்டுகள் கழித்து தனியாக நிமிர்ந்து நின்றாள்.. தனக்கென்று ஒரு சிறிய அலுவலகம்..... நியாயத்தின் அடிப்படையில் வழக்குகளை கையாண்டாள்... பணத்திற்காக அல்ல....
பெருமிதத்தில் பெற்றோர் ...
நன்றியோடு
மைதிலி ராம்ஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஜெயில் உணவு...
தருமராசு த பெ முனுசாமி
01-Apr-2025

காற்றிற்கு ஒரு...
கே என் ராம்
01-Apr-2025
