அண்ணன் தங்கை பாசம்
தொப்புள் கொடி உறவு இல்லை..உன்
சொந்த பந்தத்திலும் நானில்லை..
குடும்ப அட்டையில் பெயரில்லை..நீ
குடியிருக்கும் வீட்டின் அருகிலில்லை..
ஆனாலும் நான் உன் அண்ணனே..!
மழலைகல்வி பயில சேர்ந்து நாம் சென்றதில்லை..
மதியஉணவும் நாம் பகிர்ந்ததில்லை..-
என் பள்ளிப்புத்தகத்தில்..உன் கிறுக்கலில்லை .
உந்தன் கபடமில்லா சிரிப்பும் நான் கண்டதில்லை..
பால்நிலா பார்த்து சாதம் உண்ணவில்லை..
நம் பாட்டியையும் அங்கே நான் பார்த்ததில்லை..
உன்பாட்டும் பரதமும் கண்டதில்லை..
வீட்டின் விட்டத்தில் பட்டம் விட்டதில்லை..
உன் பட்டு பாதமும் எனை எட்டி உதைத்ததில்லை
ஆற்றுக்குச் சென்று ஆடிக் குளித்ததில்லை.. நாம்
அதனோரம் தூண்டிலில் மீன் பிடித்ததில்லை.
அலைகடல் மண்ணில் வீடுகட்டியதில்லை-நாம்
மழையில் நனைந்து ஆடிக்குதித்ததில்லை.
வீட்டுத் தோட்டத்தில் பூ பறித்ததில்லை..உன்
விளையாட்டு தனத்தையும் நான் ரசித்ததில்லை..
சோர்வு போக்க உனை சிரிக்க வைத்ததில்லை
அடம் பிடித்து நீ எதையும் கேட்டதில்லை...
நீ கேட்காத எதையும் வாங்கித் தந்ததில்லை.
சோகத்துடன் என் தோளில் நீ சாய்ந்ததில்லை..உன்
வழிகின்ற விழி நீரை நான் துடைத்ததில்லை.
வாழும் தூரம் அதிகமிருந்தும் நம்மில்
வளர்ந்த பாசம் தூரமில்லை..
வரமும் தரவில்லை, இறைவனும்
நாமும் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை.
இதுவரையும் இந்த.வசந்தமும் கிடைக்கவில்லை இனி வருகின்ற காலமதில் மீதமும் கிட்டுமோ..?
வசந்தமும் நம்மோடு வலயவருமோ..?
இருவரையும் எங்கேயோ..விதைத்து..
எங்கேயோ விளைய வைத்து..
இன்று இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்
காதலன்றி.. கலப்பு திருமணமின்றி..இப்படியும் மாற்றலாமோ..? இந்த நாட்டை..இன மத ஜாதியற்ற
அன்பெனும்..வடிவம் கொண்டு..
அளவற்ற நேசம் கொண்டு...
அண்ணன் தங்கை பாசம் கொண்டு.
- சூர்யா செல்வம்.