காமராஜர் - 1

காமராஜர் எனும்
பெயர்கொண்ட
சீதை இல்லாத ராமன்
இவன்
ஏழைப் பிள்ளைகளுக்கெல்லாம்
பாதை காட்டிய மாமன்

இவன்
நடை போடும்போதெல்லாம்
படை கூடியது பின்னால்
இவன்
உடை போடும்போதெல்லாம்
தடை ஓடியது முன்னால்

இவன்
எராளமான பள்ளிகளுக்கு
கண்ணைக் கொடுத்தவன்
ஏழைப் பிள்ளைகள் உயர
தன்னைக் கொடுத்தவன்

தலைநரை மறைக்கக்கூட
தலை மை ஏற்காதவன்
ஏழைத்
தலைமுறை சிறக்க
இந்திய காங்கிரசுக்கு
தலைமை ஏற்றவன்

இவன்
தாய்க்கே தண்ணீர் தடுத்தவன்
முதல்வனாயினும்
கோரைப் பாய்க்கே தன்னைக் கொடுத்தவன்

சுறுசுறுப்பில் மட்டும்
எல்லையில்லா எலி அவன்
அரசு சொத்தை எள்ளளவும்
சுரண்டாத எளியவன்

வெள்ளை ஆடையை
நேர்மையாய் அணிந்தவன்
கொள்ளை அடிப்போரை
கூர்மையால் கொல்லத் துணிந்தவன்

இவன் பாதம் பட்டபின்புதான்
சேலத்தில் இரும்பு உருகியது
சேற்றில் கூட கரும்பு பெருகியது

எழுதியவர் : குமார் (4-Apr-16, 3:18 pm)
பார்வை : 397

மேலே