ஸ்ரீமதி ஸ்ரீமதி

அரசு அலுவலர்: :::அம்மா ஆதார் அட்டையிலே உங்க குடும்ப உறுப்பினர்கள் பேரையெல்லாம் பதியணும். அவுங்க பேரு வயசு எல்லாம் சொல்லுங்க.
@
குடும்பத் தலைவி :::: என் வீட்டுக்காரர் பேரு ஸ்ரீநிவாஸ். வயசு 45. எம்பேரு ஸ்ரீமதி ஸ்ரீமதி வயசு 40. எங்க மூத்த பையம் பேரு ராக்கேஷ். வயசு 14, அவந் தங்கச்சி பேரு சுகன்யா. வயசு 13. மொத்தம் எங்க குடும்பத்திலே நாலு பேருதாங்க.
@
அ. ஊ::::சரி உங்க பேர ஏன் ரண்டு தடவ சொன்னீங்க?

கு. த.::::::நான் கல்யாணம் ஆனவள்னு உங்களுக்குத் தெரியாதா?
@
அ. ஊ::::: உங்க கணவர் பேரச் சொன்னபோதே அது தெரியுங்க.நாம தமிழ் நாட்டில இருக்கறோம். நீங்க பேருங்களையும் வயசையும் சொன்னாப் போதும். நானே திரு. ஸ்ரீநிவாசன், திருமதி ஸ்ரீமதி, செல்வன் ராகேஷ், செல்வி சுகன்யா -ன்னு எழுதிக்கப்போறேன்.
@
கு. .:::::::சார். எங்க ஒருத்தரு பேருகூட தமிழ்ப் பேரு கெடையாது. எங்களுக்கு தமிழும் பிடிக்காது. நீங்க ஸ்ரீ, ஸ்ரீமதி, சிரஞ்சீவி, குமாரி -ன்னு முறைப்படி எங்க பெருங்களுக்கு முன்னாடி போடறதவிட்டுட்டு உங்கள யாரு திரு, திருமதி, செல்வன், செல்வி -ன்னெல்லாம் போடச்சொன்னது?
@
அ. ஊ:::: ????????

=========================================================================
=========================================================================
சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. இந்தியாவில் பெரும்பாலான மக்களால் மட்டுமின்றி பிற நாடுகளில் பேசப்படும் மற்றும் சில நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரே இந்திய மொழி, செம்மொழி தமிழ் மட்டுமே.

எழுதியவர் : மலர் (4-Apr-16, 11:37 pm)
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே