நானொரு சுதந்திரப் பறவை
சுழன்று சுழன்று என்னில் உள்ள என்னைத்தேடி
சிறகுடைந்த பறவையாய் எழுத தெடங்கினேன்
எப்போதும் சிறகிருந்தும் பறக்கு முயலா ஈமுவாகிப்போனதில்
அவ்வப்போது என்னை இழப்பதுண்டு
நெளிந்த தூரிகையில் என்னை எழுத முயன்ற எத்துனைபேரிடம்
தெளிந்த கூா்ந்த மதியில் புத்துணர்வில்
என்னை எழிலோடு எழுதிக் கொண்டிருந்த காலமும் உண்டு
என்னை ஒப்பிட்டு தூற்றுகையில் உடன்பாடில்லாதவன், அப்போதெல்லாம்
அறைஞான் கயிறில்லாத வேட்டியாக சரிந்திருக்கிறேன்..
என்னவோ தெரியவில்லை, உயிரணு கோளறு போலும்
ஒடுங்கு பண்பு ஓங்கு பண்பாகிப் போவது போல்
ஏற்பட்ட மாற்றத்தில் நானொரு சுதந்திரப் பறவையாகிறேன்…
த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்