தசிங்காரவேல் என்கிற கவிமலரவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தசிங்காரவேல் என்கிற கவிமலரவன்
இடம்:  தருமபுாி
பிறந்த தேதி :  23-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Sep-2015
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  12

என்னைப் பற்றி...

முதுநிலை கணினி அறிவியல்

என் படைப்புகள்
தசிங்காரவேல் என்கிற கவிமலரவன் செய்திகள்
தசிங்காரவேல் என்கிற கவிமலரவன் - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2016 11:04 am

ஒரு திரைப்படத்தைத் தயாரித்துவிட்டு அத்திரைப்பட வௌியீட்டு விழாவில் இப்படம் இத்தனை கோடி ரூபாவுக்கு ஓடும் என்று பொது மக்களுக்கு ஏதோ சந்தோசமான செய்தி ஒன்றைச் சொல்வதும் அதைக்கே ட்டு பார்வையாளர்களும் குதூகலப்பட்டு விசிலடித்துக் கைதட்டுவதும் வேடிக்கையான நிகழ்வு.

படம் தயாரிப்பவன் சந்தோசப்படலாம்.அது அவன் உழைப்பு அதைக்கேட்டு இவன் பாய்ந்து பாய்ந்து சந்தோசப்படுவது எதற்காக? ரசிகர்களை மடையர்களாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம்.உங்கள் அபிப்பிராயம் என்ன?

மேலும்

அன்றாட வாழ்க்கையில் சலித்து போனவனுக்கு இது பொழுதுபோக்கு .. அவ்வளவுதான் இதில் மடத்தனம் இல்லை .. 19-Jul-2016 9:04 am
@சங்கரன் அய்யா பாலபிஷேகம் என்று சொல்லாடல் நான் பயன்படுத்த மாட்டேன் .. பாலபிஷேகம் என்பது சாமிக்கு செய்வது ..அதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை .. இதை பால் ஊற்றல் என்று சொல்லலாம் ... அது பீராக கூட இருக்கலாம் .. அவன் அன்பை வெளிப்படுத்த அவனுக்கு தெரிந்ததை செய்கிறான் .. இது தேவை இல்லை தான் ... 19-Jul-2016 9:03 am
YES THIS IS TRUE, BUT THE PEOPLE IS IMMERSE THE CINEMA , SO THATS WHY HAPPEN 18-Jul-2016 6:38 pm
உண்மையாக தொியலாம், இருந்தாலும் நான் என்னுடைய சுயம் என்றாகும் போதோ, எனக்கானது எனும் போது நான் விருப்பப்படும் ஒருவாின் நலனில் வளா்ச்சியில் அக்கறை கொள்வதும், வளா்ச்சி குறித்து கூறும் போது எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. மனிதன் அடுத்தவாின் வளா்ச்சியில் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், உதவ வேண்டும் இதுவே அரோக்கியமான மனநிலை எனவம் அரோக்கியமான சமூகம் என்றாகும் போது விரும்பும் நடிகன் விரும்பும் நபாின் வெற்றி குறித்து மகிழ்வது இயல்பான ஒன்று. 18-Jul-2016 12:54 pm

ரூ 300 ஐ வீனாக்க வேண்டாம் என்று
தோ்வெழுத புரப்பட்டேன்
600 ரூபாய் எடுத்து கொண்டு..

மேலும்

நிதர்சனமான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jul-2016 6:11 am

பெண்னை தொட்டுத் துகிலுரித்த காலம் விரட்டி
ஆடை உடுத்தும் நிகழ்வில் துளிா்விடுகிறது,
கவா்ச்சியில் யாரை கவரும் என்னமோ?
ஆடை வெட்டி ஒட்டும் நிகழ்வில் நடந்தேறுகிறது.

மேலும்

உண்மைதான்...மனிதனை வழிகெடுக்கும் முதன்மை ஆயுதம் 07-Jul-2016 6:11 am

ததும்பிய அலையில் கழல் அணிந்து
அவசரமே இல்லாமல் வந்துசேரும் காத்திருப்பது மட்டும்
எத்துனை அவசரம் அதிலிருந்து மீண்டு செல்ல
எண்ண அலைகள் நேரெதிரென இருக்கையில்
தீ மிதிப்பது போன்றதொரு எண்ணம்
எப்பொழுது அதிலிருந்து மீண்டு செல்வோமென்று
எதிர்பார்புக்கு நஞ்சு கொடுக்கும் போதுதான்
ஆனந்தம் கொள்வோம் காத்திருப்பை கொலை
செய்தது அறியாமல்.....

மேலும்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 11:00 pm

செம்பவளம் குழம்பாக்கி பெய்தாற் போலச்
செங்குருதி ஆறாக , அகடியமிழைத்த ஈழபிரசண்டன் ;
நம்மீழன் அழன்கன்டதும் காலம்காணா குரூரம் ;
இந்நாளிங்கு கையறுநிலையின்றி , ஈயும் பூதபலிக்கு
புல்லகமெல்லாம் புதுநாணயமொட்டி சுடுகாடனுப்பும் புனமொழியிங்கு ;
எவ்வா(ஆ)ரணன் அருள்வான் பூரணன்சக்தி , புஞ்சுதல்
கண்டிடவே ! அந்நாளில் புட்பரசம்பருகிட புதுபிரவேசம்
கண்டிருப்பான் , சிரந்தூக்கி குலவணம் விரட்டிடவே !

மேலும்

அறம் நிறைந்த உலகம் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 10:54 pm

கரு முடிகள் நிறைந்த
என் நெஞ்ச மஞ்சத்தில்
மயிலிறகாய் வருடி
படுத்திறங்கியவாறு
கேட்கிறாள் மகள்
“ ஒரு கதை சொல்லுப்பா”


குழந்தையின் கெஞ்சுதல்களும்
தகப்பன்களுக்கு அதிகார உத்தரவுதானே..
சொல்ல ஆரம்பித்தேன்..
”அய் ஜாலி ஜாலி..
அய்ய...
அய்யோ அப்படியா?,
ஒஹோ.. ஏன் அப்படி?
பாவமில்லப்பா,
அவன் ஏன் அப்படி சொன்னான்?,.
ரொம்ப கெட்டவளா பா?,
அப்புறம் என்னாச்சி பா?,
சரி சரி பா..”
என்றவாறே
உறங்க ஆரம்பித்தாள்.


என் நெஞ்சத்தில்
சிறு வெண்புறா
உறங்க ஆரம்பித்ததுப் போல
சொர்க்க மெத்தையில்
விழிமூடி அயர்ந்து விட்டேன்...


சில நாழிகைகள் கழித்து....


வெயில் கதிர்கள்
விழியில் பட்டு
விடியல்

மேலும்

அருமையான கவிதை குமார்...படித்தவுடன் வலித்தது இதயம்..... 11-Apr-2016 11:14 pm
மஞ்சத்தில் விளையாடிய மயிலிறகு பற்றிய பதிவு உணா்வுகள் நிறைந்த ஒன்றாக உள்ளது..சிறப்பு..... 04-Apr-2016 3:51 pm
அருமை... 04-Apr-2016 3:50 pm
அழுத்தமான உணர்வு.. 04-Apr-2016 3:19 pm

யாதுமாகி நின்றாள்

நடையுரு பிணமாய் உடையதொரு பெண்மங்கை
இருநடை கேள்வி தினம்நூறு கண்டாள்
வஞ்சத்தில் பஞ்சம் கண்ட பருவ மங்கை அவள்.
மஞ்சம் பல காணுகின்றாள், துருவம் பல போகின்றாள்,
தஞ்சம் புகும் தரணியெல்லாம் கொஞ்சுதல்குள்ளாகி
மிஞ்சுதலில் அவள் அவ்வப்போது செல்லாக் காகிதம்.
கொடையுரு மனமாய் உடையதொரு மண்மக்கள் வேண்டி
தவமிருகோலத்தில் யாருமின்றி அஞ்சுதலில் யாதுமாகி போகிறாள்.

மேலும்

நல்ல படைப்பு தொடருங்கள் வாழ்த்துக்கள் 02-Apr-2016 5:46 pm
தசிங்காரவேல் என்கிற கவிமலரவன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2016 10:57 pm

அ . நீங்கள் விரும்பிப் படிக்கும் எழுதும் கவிதை எது ? ஏன்

1. யாப்பு

2.புதுக் கவிதை

3.ஹைக்கூ

4.திரைப் பாடல்

ஆ . இங்கே நீங்கள் எழுதும் கருத்தை விரும்புகிறீர்களா அல்லது நட்சத்திர சொடுக்கையா?
அல்லது இரண்டையுமா ? ஏன்

இ . கவிதைக்கு கணினினி வலைகள் இருக்கும் போது புத்தகம் வெளியிடுவது தேவையா ?
ஏன் ?
விரிந்த வாசகர் வட்டம் கிடைக்கும் என்பதாலா ? அல்லது விற்பனை நோக்கமா ?
அல்லது இன்னும் பிரபலம் அடையலாம் என்ற எண்ணமா ?
அல்லது ஏதோ ஒரு மனத் திருத்தி கிடைகிறது என்பதாலா ?
----கவின் சாரலன்

மேலும்

எதை வேண்டுமானாலும் கவிதையாக மாற்றலாம் என்பதிலும் கவிதையாக வாசிக்க இயலும் என்பதிலும் அதி நம்பிக்கை கொண்டவன் நான். கதை சாதாரன பேச்சை கூட கவிதையாக்க வேண்டுமானால் வாசிக்கும் தொனியில் கவிதையாக்கலாம் என்பதையும் எற்கின்றவன். யாப்பு என்பதற்கு ஒரு கவிதை எழுதினேன் யாப்பு யாக்கியவன் எவனடா? எத்துனை அழகிய உறுப்புக்கள் எழுத்து அசை சீா் தளை அடி தொடையென உலகம் யாவையும் யாக்கிய யாப்பு அழகுதான் கவிதையெனக் கூறும் போதும் அணிக்கு அணிசோ்தவன் எவனடா...? என்ற கவிதை சட்டென நினைவுக்கு வந்து போகிறது. ஹைக்கூ என்றால் என்னவென்றெ தெரியாத ஒரு நபராகத்தான் நானும் இருந்தேன்.ஒரு சிறு போட்டியில் நானும் ஹைக்கூ எழுதி இருக்கிறேன். யாராவது நான் எழுதியிருக்கிறேன் என சொன்னாலே அதை வாங்கி படிக்கும் இயல்பு கொண்டவன் . யாப்பு புதுக் கவிதை .ஹைக்கூ திரைப்பாடல் மரபுக்கவிதை என எதையும் படிக்கும் இயல்புடையவன். மேலும் ஒரு அன்பான வேண்டுகோள் எனது கவிதைகளை இந்த தளத்தில் வெளியிட விரும்புகிறேன் அதற்கான வழிமுறைகளை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். 08-Mar-2016 2:41 pm
அழகிய சிறப்பான கருத்து புகழ்விழி புகழேந்தி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் யாப்பினிற் கோரிணை இல்லை தமிழில் பிறபின் வருதோ ழியர் வாழ்த்துக்கள் நன்றி கவிப்பிரிய புகழ் விழி அன்புடன், கவின் சாரலன் 03-Mar-2016 4:37 pm
யாப்புக் கவிதையை விரும்பும் நீங்கள் யாப்பில் எழுதுவதுண்டா ? இங்குள்ள யாப்புப் பதிவுகளை படிப்பதுண்டா ரசிப்பதுண்டா கருத்து சொல்வதுண்டா ? யாப்பு விரும்பும் உங்கள் விழிகள் புகழ் விழிகளே வாழ்த்துக்கள் நன்றி கவிப்பிரிய புகழ் விழி அன்புடன், கவின் சாரலன் 03-Mar-2016 4:20 pm
கணினியை எல்லோரும் பயன்படுத்துவதில்லை.அதிகம் புத்தகம் வாசிப்பவர்கள் பலபேர் உண்டு. "என் நண்பர்கள்கூட கணினி அதிகம் பயன்படுத்தினாலும், இதுபோன்ற வலைதளங்களில் அவர்கள் வருவதில்லை, ----------------------------------------------------------------------------------- வேலையின் நேரம்போக மீதி நேரங்களில் புத்தகம் வாசிப்பது அவர்கள் பழக்கம். புத்தகம் பலரையும் சென்று அடையுமே" ---புத்தக வாசிப்பைப் பற்றிய சிறப்பான தகவல் . வாழ்த்துக்கள் நன்றி கவிப்பிரிய முதல் பூ அன்புடன், கவின் சாரலன் 03-Mar-2016 4:09 pm
தசிங்காரவேல் என்கிற கவிமலரவன் - மதிபாலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2016 3:27 pm

கவிதைகள் எதற்காக படிக்கப்படுகின்றன ? ரசனைக்காகவா ? புதிதாக படைப்பதற்காகவா ?

மேலும்

கவிதைகள் உணர்ச்சிகளை வெளிப் படுத்துவதற்காகவே படைக்கப் படுகின்றன. உரைநடையில் வெளிப்படுத்த முடியாதா எனில் முடியும்.ஆனால் கவிதை வடிவில் வெளிப்படுத்தினால் படிப்பவர் மனதை கவர்ந்து அவர்தம் உள்ளத்தில் ஆழமாக பதியும். புதுக் கவிதையோ அன்றி மரபுக் கவிதையோ அது தன் அழகால் படிப்பவர் மனதை கவர்கிறது. புதுக் கவிதை எழுத இலக்கணம் தேவை இல்லை ஆயினும் சந்தம் என்ற அழகான வரைமுறையை அது மீறாதிருப்பது நல்லது. சந்தமானது மனதிற்குள் படித்தாலுமே காதில் இனிய இசை ஒலிக்கும் தன்மையது. பாரதத்தில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்த பாரதி செய்யுள் நடையிலிருந்து வெளி வந்து புதுக் கவிதை நடையில் சந்தம் குறையாமல் பாடினான். மனித சமுதாயத்தை நல்வழிப் படுத்த திருவள்ளுவர் போன்றோர் மரபுக் கவிதையாம் செய்யுள் வடிவில் சுவைபட வடித்து சமுதாயத்தை சிந்திக்க வைத்தார்கள்.சுதந்திர தாகம் வர வேண்டும் என்பது ஒரு உணர்ச்சி.சமுதாயம் மாற வேண்டும் என்பது உணர்ச்சி. காதல் என்பது ஒரு உணர்ச்சி பாசம் என்பது ஒரு உணர்ச்சி. எல்லா உணர்ச்சிகளுக்கும் கவிதைகள் படைக்கப் படுகின்றன. ரசனையுடன் படிக்கப் படுகின்றன. படிப்பவர்கள் மேலும் சிந்தித்து புதிய கவிதைகளும் படைப்பது உண்டு. படித்த கவிதைகள் பற்றி சிந்திப்பவர்கள் புதிய உலகமும் படைப்பது உண்டு. 02-Mar-2016 11:30 pm
கவிதை படிப்பது இரண்டிற்கும் இல்லை .. விமர்சிக்க மட்டுமே ..!! விமர்சனம் நன்றாக இருந்தால் அவர் ரசித்திருக்கிறார் என்று அர்த்தம் விமர்சனம் மிக நன்றாக இருந்தால் கவிதையை பிரதி எடுக்கிறார் என்று அர்த்தம் ..அவ்வளவே ..!! 29-Feb-2016 8:48 pm
கவிதை எதற்காக என்பது மாறுபட்ட ஒன்று? கவிதை எழுதுவதன் காரணம் தன்னுள் ஏற்படும் உணா்வுகளை வெளிப்படுத்தும் உயிரோட்டமுள்ள ஆயுதம். எங்கோ எப்போது ஏற்பட்ட மனக்குமறல்களை வெளிப்படுத்தவும் இயலும். ஒரு நிகழ்வினை நேரடியாக தட்டி கேட்க இயலாத ஒன்றை கவிதையில் கேட்க இயலும். கவிதையில் ஒருவரை தட்டி எழுப்பவும் இயலும் 29-Feb-2016 3:52 pm
கவிதை படிப்பதற்கும் ரசிப்பதற்கும் படித்ததை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்பதற்கும் . எழுதப் படுகிறது கவிதை இதய வீணையை மீட்டும் இலக்கிய விரல்கள் வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு என்று என்னைக் காதலியாக்கி காதில் வந்து அது சொல்லும். கவிதை கயல் என அசையும் காதல் விழி நெஞ்சில் பெருகி வரும் நீல நைல் நதி குயிலாய்க் கூவினால் மனம் மலர்த் தோட்டம். அருவியாய் பொழிந்தால் மனம் ஒரு குற்றாலம் அது மௌனமானாலும் உள்ளே சலசலக்கும் நீரோடை.! ---அன்புடன், கவின் சாரலன் 28-Feb-2016 10:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே