காத்திருப்பு

ததும்பிய அலையில் கழல் அணிந்து
அவசரமே இல்லாமல் வந்துசேரும் காத்திருப்பது மட்டும்
எத்துனை அவசரம் அதிலிருந்து மீண்டு செல்ல
எண்ண அலைகள் நேரெதிரென இருக்கையில்
தீ மிதிப்பது போன்றதொரு எண்ணம்
எப்பொழுது அதிலிருந்து மீண்டு செல்வோமென்று
எதிர்பார்புக்கு நஞ்சு கொடுக்கும் போதுதான்
ஆனந்தம் கொள்வோம் காத்திருப்பை கொலை
செய்தது அறியாமல்.....

எழுதியவர் : சிங்காரவேல் (எ) கவிமலரவன் (30-Apr-16, 2:32 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 83

மேலே